
சத்து நிறைந்த எலுமிச்சை புல் ஆன்டி பாக்டீரியல் பண்பு படைத்ததால் சருமத்திற்குச் சிறந்தது. ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் குணம் நிறைந்த இதோடு எண்ணெயும் சேர்க்க சிறந்த மாய்ஸ்சுரைசர் க்ரீம் தயாரிக்கலாம்.
கால்கப் அவகேடோ,ஜோஜோபா அல்லது ஆர்கான் ஆயில் எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை புல் ஆயிலில் இருந்து 3 சொட்டுக்கள் இதில் சேர்த்து நன்கு கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்து காலை மற்றும் மாலை முகத்தில் தடவிக் கழுவ சருமம் ஈரப்பததுடன் இருக்கும். எலுபிச்சை புல் பாக்டீரியாவைப் போக்கி நல்ல பளிச்சென்று ஆக்கும்.
எலுமிச்சை புல் ஆயில், தயிர், தேன்
கால் கப் தயிரில் 3 சொட்டு எலுமிச்சைபுல் ஆயில் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் சேருங்கள். இதோடு ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை களிமண் சேர்த்து நன்றாகக் கலக்கி முகத்தில் உதடு மற்றும் கண்ணைத் தவிர்த்துக் தடவவும். 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரத்தில் ஒரு நாள் இதைச் செய்யலாம்.
எலுமிச்சை புல் ரோஜா இதழ் சாமோமைல் டீ இலைகள்
எலுமிச்சை புல்லை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும். இதில் ரோஜா இதழ்கள் மற்றும் சாமோமைல் இலைகள் சேர்க்கவும். இது நல்ல மணத்தைத் தரும். உங்கள் தலைமுடியை நன்குமுடிந்து உங்கள் முகத்தை இந்த சூடான கலவையின் முன் ஆவி பிடிக்கவும். ஒரு நிமிடம் வரை இதைச் செய்யலாம். இதனால் உங்கள் முகம் மாசு மறு நீங்கி பிரகாசமாகும்.
2. வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை ஸ்க்ரப்ஸ்
உடலை எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்களை நீக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலை பொலிவாக வைக்கக் கூடியவை உடல் ஸ்க்ரப்கள். இயற்கை ஸ்க்ரப்கள் பற்றிப் பார்ப்போம்.
காபி ப்ரௌன் சுகர் ஸ்க்ரப்
காபியில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்ஸ் வயதாவதைத் தடுக்கிறது. ப்ரௌன் சுகர் இறந்த செல்களை நீக்கி பொலிவாக்குகிறது. அரை கப் காபி பௌடருடன் அரை கப் ப்ரௌன் சுகர் சேர்த்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து மசாஜ் செய்ய சருமம் பளபளக்கும்.
ரோஜா இதழ் ஸ்க்ரப்
ரோஜா இதழ்களை காயவைத்து பொடி செய்து வைக்கவும். இதில் கடலைமாவு, பாதாம் பௌடர் சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்கி சருமத்தில் தடவி ஒரு ஈரத்துணியால் துடைக்கவும். ரோஜா அழற்சியை ப் போக்கும் கடலைமாவு எக்ஸ்ஃபோலியேட் செய்யும், பாதாம் ஊட்டச்சத்து அளிக்கும்.
கடல் உப்பு ஸ்க்ரப்
இதில் மினரல்கள் உள்ளதால் நல்ல பிரகாசத்தைக் கொடுக்கும். ஆலிவ் ஆயில் மற்றும் ஜோஜோபா ஆயில் ஈரப்பதத்தைத் தரும். காபி எக்ஸ்ஃபோலியேட் செய்யும். ஒன்றரை கப் கடல் உப்பில் ஒன்றரை கப் காபி பௌடர் ,ஒரு கப் ஆலிவ் ஆயில் மற்றும் 5லிருந்து 15 சொட்டு ஜோஜோபா ஆயில் சேர்த்து நன்றாகக் கலந்து உடலில் தடவவும். பிறகு கழுவ உடல் புத்துணர்ச்சியோடும் பொலிவோடும் காணப்படும்.