இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சில விஷயங்களை செய்தீர்கள் என்றால் சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாறும். அந்தவகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
பெண்கள் தாங்கள் அழகாக இருக்க பல முயற்சிகளை செய்வார்கள். பலர் பார்லர் செல்வார்கள். சிலர் வீட்டில் இயற்கை பொருட்களை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக்குவார்கள். எதுவாயினும் ஒருமுறை செய்துவிட்டு விடுவது நிரந்தர பலனை தராது. தொடர்ந்து பராமரித்தல் மிகவும் அவசியம். குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன் சில விஷயங்களை செய்வது மிகவும் அவசியம்.
1. பொதுவாக இரவு நாம் தூங்கும்போதுதான், முகத்தின் தசைகள் ஓய்வெடுக்கும். அதேபோல் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஆகையால் அந்த சமயத்தில் சருமம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் தூங்கும் முன் முகத்தை நன்றாக கழுவிவிட்டு தூங்க வேண்டும். வெளியிலிருந்து வந்தவுடன் முக சருமத்தின் அழுக்கை எப்படி சுத்தம் செய்கிறீர்களோ அதேபோல் தூங்குவதற்கு முன்பும் சுத்தம் செய்தல் வேண்டும்.
2. உங்கள் தலையணையை சற்று தடினமாக வைத்து தூங்குவது அவசியம். மிகவும் உயரமாக வைக்காமல் கொஞ்சம் தூக்கி வைக்கலாம். தலைப்பகுதி லேசாக மேல் இருக்க வேண்டும். இதனால், கண்களின் கீழ் வீக்கம் வராமல் இருக்கும். அதேபோல் தலையணை இறுக்கமாகவோ கரடு முரடாகவோ இருத்தல் கூடாது.
3. கட்டாயம் தூங்குவதற்கு முன் மேக்கப்பை கலைத்துவிட்டு தூங்குவது நல்லது.
4. தூங்கும் முன் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மாய்ஸ்ட்ரைஸர் அல்லது பெட்ரோலியம் ஜெல் பயன்படுத்துங்கள். அவற்றைப் பயன்படுத்தும்போது கைகளை நன்றாக சுத்தம் செய்தல் வேண்டும். அதேபோல் ஒரு டம்ளர் நீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தூங்கிக்கொண்டிருக்கும்போது நடுவில் தாகம் எடுத்தால், அப்போதும் நீர் அருந்துங்கள்.
5. இவை அனைத்தையும் விட நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். நாள் முழுக்க சருமம் வெயிலாலும், தூசியாலும் நிரப்பட்டிருப்பதை மீட்கும் முயற்சி தூக்கத்தில் தான் நடைபெறும்.
இந்த ஐந்து விஷயங்களை தினமும் பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த சிறு சிறு விஷயங்களை பின்பற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.