பெண்களின் உடைகளுக்கேற்ற பொருத்தமான காலணிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

கோலாபுரி செருப்புகள்
கோலாபுரி செருப்புகள்Image credit - pixabay.com
Published on

வெவ்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி ஆடைகள் அணிவது மட்டும் முக்கியமல்ல, அவற்றுக்கு பொருத்தமான பாதணிகளை அணிவதும் மிகவும் முக்கியம். அப்போதுதான் அவை அணிந்திருக்கும் ஆடைகளின் தோற்றத்தை மேம்படுத்தும். மேலும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

கோலாபுரி செருப்புகள்;

மகாராஷ்டிராவில் தயாராகும் பிரபலமான காலணி இது. இந்திய மற்றும் மேற்கத்திய ஆடைகளுடன் நன்றாக மேட்ச் ஆகும். இது சில்வர் மற்றும் தங்கக் கலரில் கிடைக்கிறது. ஹீல்ஸ் அணிய விரும்பாத பெண்களுக்கு இது ஏற்றது. சல்வார் கமீஸ், குர்தி புடவைகளுக்கு ஏற்றது. அடிப்பகுதியில் தட்டையான வடிவம் கொண்ட செருப்புகள். எனவே எல்லா வகையான பெண்களுக்கும் ஏற்றது.

ஸ்னீக்கர்கள்;

டி- ஷர்ட், பேண்ட், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட், நீள கவுன், சிங்கள் பீஸ் எனப்படும் கணுக்கால் வரையுள்ள கவுன்கள் போன்ற உடைகளுக்கு மிகவும் ஏற்றது. இவை நவநாகரிகத் தோற்றத்துடன் அணிவதற்கும் வசதியாகவும் இருக்கும்.

ஹை ஹீல்ஸ்;

புடவை, லெஹங்கா அல்லது மேற்கத்திய உடைகளுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் குதிகாலின் அளவு சிறியதாகவும் அல்லது உயரமான ஹீல்ஸ் உள்ள செருப்புகளும் உள்ளன. இவை ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!
கோலாபுரி செருப்புகள்

ஜூட்டி;

இது ஜீன்ஸ் பேண்ட், கவுன், சல்வார் செட்டுக்கு மிகவும் ஏற்றது. ஆனால், புடவைக்கு இதை அணியவே முடியாது. நன்றாக இருக்காது. இது தங்கம் அல்லது வெள்ளி நூல்களின் அற்புதமான எம்பிராய்டரி கொண்ட தோலினால் ஆனது. பார்வைக்கு கிராண்ட் லுக் தரும்.

மோஜாரி;

இது பாரம்பரியமான காலணியாக இருந்தாலும் இன்று வரை ஃபேஷனில் உள்ளது. இது அற்புதமான எம்பிராய்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இது அனைத்து வகை இந்திய ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. தோற்றத்தின் அழகை மேம்படுத்தும் வடிவமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கிறது. சல்வார் கம்மீஸ், பட்டியாலா பேண்ட், ஜீன்ஸ் பேண்ட் உடன் நன்றாக பொருந்தும்.

பிளாக் ஹீல்ஸ்;

சீரான மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்கு உதவும் ஹீல்ஸ். உயரம் குறைவாக இருப்பவர்களுக்கும் தனது உயரத்தை அதிகரித்துக் காட்ட நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

ஸ்டைலெட்டோஸ்;

இது ஹை ஹீல்ஸ்களின் ராணி எனப்படுகிறது. ஏனென்றால் ஆறு அங்குல உயரம் வரை இருக்கும். முன்புறம் கால் விரல்கள் மூடப்பட்டு. ஷூ வடிவத்தில் இருக்கும். குதிகாலி ஆறு அங்குல உயரம் இருக்கும். இதை அணிந்து நடப்பது மிகவும் கடினமாக தோன்றலாம். ஆனால் நான்கு பயிற்சி பெற்ற மாடல்கள், நடிகைகள் இவற்றை அணிவார்கள். ஜீன்ஸ்கள் மற்றும் நவ நாகரிக ஆடைகளுக்கு ஏற்றது. கவுன் அல்லது காக்டெய்ல் ஆடைகளுக்கு மெட்டாலிக் ஃபினிஷ்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டைலெட்டோஸ்கள் பொருத்தமானவை.

ஸ்டைலெட்டோஸ்...
ஸ்டைலெட்டோஸ்...Image credit - pixabay.com

லோஃபர்கள்;

ஜீன்ஸ், மிருதுவான சட்டை மற்றும் கிராஸ் பாடி பேக் ஆகியவற்றுடன் அணிய ஏற்றவை. பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதே சமயம் சவுகர்யமாகவும் இருக்கும். விதவிதமான நவநாகரீக டிசைன்களில் கிடைக்கும்.

ஷூக்கள்:

கேஷுவல் டிரஸ் உடன் வாக்கிங் செல்லும்போது ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் ஏற்றவை அல்லது கேன்வாஸ் ஷூக்கள் அணிந்து கொள்ளலாம். அலுவலகத்திற்கு ஃபார்மலாக உடை அணியும்போது ஃபார்மல் ஷூக்கள் ஏற்றவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com