எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக சிக்கல்கள் உண்டு ஆனால் அதிலிருந்து மீண்டு வருவது அவருடைய புத்திசாலித்தனத்தை பொறுத்து தான். 

குடும்ப சிக்கல். அலுவலக சிக்கல் வெளிவட்டார நட்பு சிக்கல் உடல் ரீதியாக கூட சிக்கல் என பலவிதமான சிக்கல்கள் உள்ளன. சிக்கல்கள் வந்துவிட்டால் போதும் நாம் உடனே துவண்டு விடுகிறோம். ஆனால் அதை எதிர்கொள்வது எப்படி அதை தீர்ப்பது எப்படி என்று நாம் யோசித்து இருக்கிறோமா அப்படி யோசித்து இருந்தால் நம்மை கண்டு சிக்கல் பயப்படும்.

சிக்கல் வரும்போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது. சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும். நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும். நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்.

இதையும் படியுங்கள்:
ஒரு கதவு மூடினால் இரண்டு கதவுகள் திறக்கும் தெரியுமா?
motivation article

ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே,

"சிக்கல்களுக்கு தீர்வு... Ctrl + alt + del +" என்றிருந்தது. அவரிடம் விளக்கம் கேட்டபோது சொன்னார்,

Ctrl என்பது ( Control ), (கட்டுப்படுத்தல்)

alt என்பது ( alternate), ( மாற்று..)

del என்பது (delete ), ( நீக்குதல்.. 

சிக்கல் வரும்போது நம்மை நாமே கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்". வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார். மாற்றத்தை ஏற்படுத்தினால்தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கி விடும்.வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்க்க முனையும் போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம்.

நமக்கு வரும் சிக்கல்களை நம்மால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விட்டாலே போதும். நீங்களே முயற்சி செய்து உங்கள் சிக்கல்களை தீர்த்து வைத்து விடுவீர்கள் ஆனால் அப்படி செய்யாமல் தன் சிக்கலுக்கு எப்படி தீர்வு காண்பது என்று நாம் தீர்வை வெளியே தேடிக் கொண்டிருப்போம்.

சிக்கல்கள் மட்டுமல்ல நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு மட்டுமே உண்டு என்பதை நாம் என்றைக்கு உணர்கிறோமோ அன்று முதல் நமக்கு ஆனந்த வாழ்க்கைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com