‘சன்ஸ்கிரீன்’ பற்றிய முழுமையான தகவல்கள்... தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Sunscreen benefits
Sunscreen benefitsImage Credits: Babo Botanicals
Published on

ம்முடைய சருமம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பு. அதாவது போட்டோ ஏஜ்ஜிங் (Photo aging) என்று சொல்லுவோம். சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நம்முடைய தோல்களில் ஊடுருவி அதிலிருக்கும் டிஎன்ஏ (DNA)வை பாதிப்படைய செய்யும். இதனால் சருமத்தில் சுருக்கும், வயதான தோற்றம், பிக்மெண்டேஷன் போன்றவைக்கான அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கும். இதை போக்குவதற்காகத்தான் சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறோம்.

புறஊதாக்கதிர்கள் 10 முதல் 400 நேனோ மீட்டர் வரை உள்ளதை தான் சொல்லுவோம். இதில் UVA, UVB என்று இருவகை உண்டு. இந்த இரண்டு கதிர்களுக்கும் நம்முடைய சருமத்தில் ஊடுருவி சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை உடையது. இந்த இரண்டு கதிர்களிடமிருந்து நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறோம்.

ஒரு சன்ஸ்கிரீன் வாங்குவதாக இருந்தால் அதில் Broad spectrum இருக்கிறதா? என்று கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். SPF rating ஒரு சன்ஸ்கிரீனில் இருப்பதற்கான காரணம் அந்த சன்ஸ்கிரீன் UVB கதிர்களை எந்த அளவு வடிகட்டுகிறது என்பதை நிர்ணயம் பண்ணுவதற்காகவேயாகும். SPF 30 இருந்தாலே 96% UVB கதிர்களை வடிகட்டிவிடும். SPF 50 இருந்தால் 98% UVB கதிர்களை வடிகட்டிவிடும். அதனால் சன்ஸ்கிரீன் வாங்கும்போது எப்போதுமே SPF 50 வாங்குவது சிறந்தது.

அடுத்தது PA++, PA+++ என்றால் என்னவென்று பார்க்கலாம். இது எதற்காகவென்றால், அந்த சன்ஸ்கிரீன் எப்படி நம்மை UVA கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது என்பதை நிர்ணயம் செய்வதற்காகவேயாகும். PA+ ஆக இருந்தால் கம்மியான பாதுகாப்பு, PA++ ஓரளவு பரவாயில்லை என்ற அளவிற்கான பாதுகாப்பு, PA+++ Best protection தரும். இதனால் PA+++ அல்லது PA++++ இருப்பது போன்று பார்த்து வாங்குவது சிறந்தது.

சன்ஸ்கிரீன்ஸ்ஸில் மூன்று வகையுண்டு. Chemical sunscreen, hybrid sunscreen, physical sunscreen ஆகும். Hybrid sunscreen என்றால் Chemical+ Physical sunscreenஐ சேர்த்து செய்தால் அதற்கு Hybrid sunscreen என்று பெயர்.

Chemical sunscreen என்னவென்றால், இதை நம் சருமத்தில் பயன்படுத்தும்போது 30 நிமிடத்தில் நம் சருமத்தில் நன்றாக உறிஞ்சிக்கொள்ளும். பிறகு சருமத்தில் சூரிய ஒளிப்படும்போது அதை Reflect செய்துவிடும். ஆனால் இந்த சன்ஸ்கிரீனை வெளியே செல்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே போட்டு விட வேண்டும். Physical sunscreen போட்டவுடனேயே அதன் வேலையை தொடங்கிவிடும். இது சருமத்தின் மேல் ஒரு லேயரை போல படர்ந்து சூரிய ஒளியிலிருந்து காப்பாற்றும். இது சருமத்தில் உறிஞ்சப்படாது என்பதால், சருமத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வராது. கர்ப்பமாக இருப்பவர்கள் கூட Physical sunscreen ஐ பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
‘கிளென்சர்’ எதற்குப் பயன்படுத்த வேண்டும்... முழுமையாகத் தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Sunscreen benefits

Chemical sunscreen ஐ 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை போட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். ஏனெனில் இது சூரியனுடன் செயல்படுவதால் சீக்கிரமே அதனுடைய பாதுகாக்கும் தன்மை குறைந்துவிடும்.

சில சன்ஸ்கிரீன்களில் Niacinamide, cica போன்றவற்றுடன் சேர்ந்து வருவது ஏனெனில் எண்ணெய் பசையுள்ள சருமத்தை உடையவர்களுக்காகவும், Hyaluronic acid, ceramides போன்றவை பயன்படுத்துவது வறட்சியான சருமத்தை உடையவர்களுக்காகவேயாகும். எனினும் புதிதாக எதை பயன்படுத்துவதாக இருந்தாலும் ஒரு நல்ல தோல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உங்கள் சருமத்திற்கு ஏற்ற பரிந்துரைக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்துவது சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com