முத்துக்களின் முத்தானப் பயன்களைப் பற்றி பார்க்கலாம்!

Pearl chain
Benefits of PearlImage Credits: Katerina Perez
Published on

ண்டைய காலத்தில் அரேபியர்கள் நல்ல விலை உயர்ந்த குதிரைகளை பாண்டிய மன்னருக்கு கொடுத்து முத்துக்களை வாங்கிச் செல்வார்களாம். கிளியோபாட்ரா முத்துக்களை மிகவும் விரும்பி அணிவார் என்ற தகவல் இருக்கிறது. ஜெருசேலம் நகரில் 12 கதவுகளிலும் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள். ‘சொர்க்கம் முத்துக்களால் ஆக்கப்பட்டது’ என்று இஸ்லாம் மதம் சொல்கிறது.

முத்துக்கள் பல நிறங்களில் வருகிறது. ஒரு சில முத்துக்கள் நீலநிறத்திலும், பிங்க் நிறத்திலும், பச்சை நிறத்திலும் என்று கடலுக்கு கடல் மாறுப்படும். மன அமைதியில்லை, எரிச்சல், கோபம், Stress அதிகமாக உள்ளது என்றால் முத்தை பயன்படுத்தலாம். முத்துக்கு உரிய கிரகம் சந்திரன் என்பதால் இது மனதை சாந்தப்படுத்தும்.

முத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். பண்டைய காலத்தில் ராஜாக்கள் முத்தை மாலையாக, மோதிரமாக அணிந்து கொண்டனர். மனரீதியான அமைதியும், அழகையும் கொடுப்பதால் பெண்களும் முத்துக்களைப் பயன்படுத்தினர்.

முத்து அணிவதால் உடலில் அழகை அதிகப்படுத்தும், சரும அழகை கொடுக்கும். கடகம் சிம்மம், மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் அணியக்கூடியது முத்து. சனியுடைய ராசிக்காரர்கள் மகரம் கூட அணியலாம். பொதுவாக இதை அனைவருமே அணியலாம். எந்த நெகட்டிவ்வான பாதிப்புகளையும் தராது. முத்தை நடுவிரலை தவிர்த்து மற்ற எந்த விரலில் வேண்டுமோ அணியலாம். பெண்கள் இதை மாலையாகவும் பயன்படுத்தலாம், ஒரு பெரிய முத்து வைத்து பென்டென்ட்டாகவும் பயன்படுத்தலாம்.

முத்து உடலில் படும்போது சிறிது சிறிதாக கரைந்து உடல் தூவாரங்கள் வழியே உள்ளே செல்ல தொடங்கும். இதனால் ரத்த சுத்திகரிப்பு, சருமப்பொழிவு, உடல் நோயை தீர்க்கும்.

மனதை ஒருநிலைப்படுத்தும், சண்டை, சச்சரவை போக்கி அமைதியான நிலையை கொடுக்கும், மனதில் உள்ள பதற்றம், பயத்தை போக்கும். நம் மனதில் உள்ள ஆசைய நிறைவேற்றி கொடுக்க முத்து பயன்படும். கண் மற்றும் தொண்டை சம்மந்தமான பிரச்சனைகளை போக்கும். நியாபக சக்தியை அதிகரிக்கும். வளர்பிறை நாளில் முத்தை அணிந்து கொள்வது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
‘பெண்களின் காலணி’ வகைகள் எவ்வளவு இருக்கு தெரியுமா?
Pearl chain

முத்து அணிவதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். முத்தை தூய்மையின் சின்னமாக பார்க்கிறார்கள். தியானம் செய்யும் போதும் முத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். திருமணத்தில் முத்தை அதிகமாக பரிசாக கொடுக்கிறார்கள் ஏனெனில் அது நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.

முத்தை தினமுமே அணிந்து கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் ஸ்டைலிஷ் மற்றும் மார்டன் லுக் கிடைக்கிறது. கருப்பு மற்றும் தங்க நிற முத்துக்களே மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய முத்துக்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com