இயற்கையாகவே சிலருக்கு உதடுகள் கருப்பாக இருக்கும். பயன்படுத்தும் மாத்திரைகள், உடல் பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை இதற்கு காரணமாகச் சொல்லலாம். மேலும் நீண்ட காலம் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கும் உதடுகள் கருமையாக இருக்கும். எனவே உங்கள் உதடு கருப்பாக இருப்பதற்கு காரணம் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருக்கும். அதற்கு இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் சில பொருட்களைத் தடவி வந்தாலே போதும் இயற்கை சிவப்பழகை உங்கள் உதடுகளுக்குக் கொண்டு வரலாம்.
உங்கள் வீட்டில் தயிர் இருந்தால் அதை பயன்படுத்தியே உதட்டின் கருமையை நீங்கள் போக்க முடியும். தயிரை அவ்வப்போது உதட்டில் தடவி மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் உதட்டின் கருமை நீங்கி இயற்கை சிவப்பழகைப் பெறலாம்.
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த தேனை உதட்டில் தடவி வருவது மூலமாகவும் உதட்டின் கருமை நீங்கும். குறிப்பாக எலுமிச்சை சாறு, தேன், ஓட்ஸ், பாதாம் ஆகியவற்றை அரைத்து உதட்டில் தடவி கொஞ்ச நேரம் ஊற வைத்து கழுவினால், நல்ல ரிசல்ட் உங்களுக்குக் கிடைக்கும்.
இரவு தூங்குவதற்கு முன்பு மாதுளைப் பழ சாற்றனை தடவி படுத்தால், உதடுகளுக்கு இயற்கையான பிங்க் நிறம் கிடைக்கும்.
எலுமிச்சை சாறில் விட்டமின் சி இருப்பதால், அதை உதட்டில் தடவுவது மூலமாக இறந்த செல்களை நீக்க முடியும்.
உதட்டில் தேப்பதற்கு சர்க்கரை சிறந்த பொருளாகும். சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து உதட்டில் தேய்த்தால் இயற்கையான ஈரப்பதம் கிடைக்கும்.
காலா காலமாக உதட்டின் ஆரோக்கியத்திற்கு வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே உதட்டின் கருமையை நீக்கி வறட்சியைப் போக்குவதற்கு அவ்வப்போது வெண்ணை தடவி வாருங்கள்.
பீட்ரூட்டை மைய அரைத்து அதை உதட்டில் தடவி வந்தால், தற்காலிகமாக கருமை நிறத்தைப் போக்கலாம். நீங்கள் உடனடியாக ஏதேனும் நிகழ்வுக்கு செல்லப் போகிறீர்கள் என்றால், பீட்ரூட் பயன்படுத்துங்கள்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் உதடுகளுக்கு இயற்கையான நிறத்தையும் ஆரோக்கியத்தையும் நீங்கள் கொண்டுவர முடியும். குறிப்பாக இவை அனைத்துமே ரசாயனங்கள் ஏதுமில்லாத இயற்கை பொருட்கள் என்பதால், உதடுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.