
ரோஸ்ஷிப் ஆயில்
இந்த எண்ணையில் அதிக அளவு வைட்டமின் ஏ சத்தும்,கொழுப்பு அமிலங்களும் உள்ளன. முகத்தில் தழம்புகள், பருக்கள் மற்றும் பிக்மெண்டேஷனையும் தடுக்கக் கூடியது. சருமத்துக்குள் ஊடுருவிச் சென்று பாதுகாக்க கூடியது.
Wild Rose oil
இதில் ரெடினாயிக் அமிலம் என்ற வைட்டமின் ஏ சத்து மற்றும் சி சத்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. முகத்தில் ஏற்படும் தழும்புகள் மற்றூம் புண்களுக்கும் மற்றும் பரு வராமல் தடுப்பதற்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வயதான தோற்றத்தையும் தடுக்கிறது.
வைட்டமின் ஈ ஆயில்
இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உள்ளதால் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் தடுக்கிறது. மேற்கூறிய ரோஸ்ஷிப் மற்றும் wild Rose ஆயிலுடன் வைட்டமின் ஈ ஆயிலை மும் சேர்க்கும்போது மூன்றும் இணைந்து செயல்பட்டு சருமத்தை பொலிவாக்கும் .
Wild Rose ஆயில். 20 மி. லி
ரோஸ் ஹிப் ஆயில். 10 மி. லி
வைட்டம் ஈ ஆயில் 20 சொட்டுகள்
மேற்கூறிய மூன்றையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைத்து இந்த கலவையிலிரூந்து தினமும் தொடர்ந்து 30 நாட்கள் பயன்படுத்த நல்ல பயன் தெரியும். மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகரிக்க பெர்ரி கீரை மற்றும் கொட்டைகளை நிறைய சேர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைக்க வேண்டும்.
கண்ணாடி மேனிக்கு அரிசி சீரம்
பச்சரிசி. ஒரு டேபிள் ஸ்பூன்
ஆலோவேரா ஜெல்
க்ளிசரின்
ரோஸ் வாட்டர்
சாண்டல் வுட் ஆயில்.
அரிசியை இரண்டு டேபிள் ஸ்பூன் நீரில் ஊறவைக்கவும்
அரைமணிநேரம் கழித்து நீரை வடிகட்டவும்.
ஒரு பௌலில் அரை டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் எடுத்துக் கொள்ளவும். அதில் பத்து சொட்டுகள் க்ளிசரின் சேர்க்கவும். மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். 4 சொட்டுக்கள் சாண்டல்வுட் ஆயில் சேர்க்கவும்.
அரிசி வடித்த நீரைக்கலக்கி மேற்கூறிய கலவையில் சேர்த்து ஒரு பாட்டிலில் வைக்கவும்.
தினமும் காலையும் மாலையும் 6 சொட்டுகள் மேற்கூறிய சீரத்தை எடுத்து முகத்தில் கைவிரல்களால் தடவவும்.
அரிசி நீர் மற்றும் சாண்டல் வுட் ஆயில் இரண்டும் நல்ல நிறத்தைக் கொடுக்கும்
ஆலோவேரா மற்றும் க்ளிசரினா ஈரப்பத்தைத்தரும்.
வைட்டமின் சி வயதாவதை தடுக்கும்
அரிசி க்ரீம்
அரிசிக் கஞ்சியுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஸ் ஆயில் மற்றும் சில சொட்டு ஈ ஆயில் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜ் ஜில் வைக்கவும். இதை முகத்தில் தடவிக் கழுவ முகம் கண்ணாடிஸபோல் பளபளக்கும்.
நரைமுடியைத் தடுக்கும் தைலம்
தேவையானவை;
வெங்காயதோல்கள் இரண்டு பெரிய வெங்காயத்திலிருந்து உரித்தது
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
கருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்
கிராம்பு. 5
கடுகு எண்ணெய் ஒரு கப்
வெங்காயத்தை சுத்தமாக்கி தோல் உரித்து துடைத்து வைக்கவும். இந்த தோல்களை நன்றாக வாணலியில் வதக்கவும் இதில் கறிவேப்பிலை, கருஞ்சீரகம் மற்றும் கிராம்பு சேர்த்து. இவற்றைக் கைவிடாமல் கலக்கவும். வெங்காயம் கருப்பாக ஆகும் வரை கலக்கவும். இந்த முறை ஆக்சிடேஷணை அதிகரிக்கும்.
இவைகளை நன்கு ஆறவைத்து. இதில் கடுகு எண்ணெயை சேர்க்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் வைக்கவும் நரைமுடியில் இந்த எண்ணையை மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பூ வாஷ் செய்யவும். வாரத்தில் 3 தடவை இப்படிச் செய்யலாம்.