விசேஷ நாட்களில் மேக்கப் கலையாமல் தேவதை போல் ஜொலிக்க எளிய டிப்ஸ்!

வியர்வையால் மேக்கப் கலைந்துவிடுகிறதா? நாள் முழுவதும் முகம் பொலிவோடு இருக்க இதோ எளிய வழிகள்!
நீண்டநேர மேக்கப்
நீண்டநேர மேக்கப்AI image
Updated on

விசேஷம் மற்றும் திருமண நாட்களில் மணப் பெண்களைப் போலவே தங்களையும் அழகாக காட்டிக்கொள்ள பெண்கள் ஆசைப்பட்டு மேக்கப் போட்டுக்கொள்வர். ஆனாலும் நீண்ட நேரத்திற்கு நடக்கும் விசேஷங்களின் காரணமாக வியர்வை ஏற்பட்டு அதனால் சீக்கிரமே மேக்கப் கலைந்துவிடும்.

மெனக்கெட்டு போட்ட மேக்கப் சீக்கிரமே கலைந்து விடும்போது பெண்கள் மனது வருத்தப்படும். அந்த வகையில் ஆசை ஆசையாய் போட்ட மேக்கப் சீக்கிரமே கலைந்து போகாமல் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், முகத்தை பொலிவாகவும் வைக்கும் எளிய அழகு குறிப்புகள் குறித்து இப்பதிவில் காண்போம்

நீண்டநேர மேக்கப் நிலைத்திருக்க உதவும் மந்திரமான ப்ரைமர் மற்றும் செட்டிங் ஸ்ப்ரே!

மேக்கப்பொருளான பிரைமர் நாம் போடும் மேக்கப்பை நீண்ட நேரம் கலையாமல் வியர்வையின் காரணமாக ஏற்படும் ஈரப்பதத்தில் இருந்து காத்து நிலைத்திருக்க செய்யும் வகையில் முகத்தில் உள்ள தோலை தயார்படுத்தும் வேலையை செய்கிறது.

பவுண்டேஷன் மற்றும் கன்சீலர் ஆகியவற்றை பிரைமருக்கு பிறகு பயன்படுத்துவதால் நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியாக மேக்கப் அப்படியே நிலைத்திருக்கும். மேலும் மேக்கப்பை மென்மையாகவும் அழகாகவும் காட்டுவதில் பிரைமருக்கு தனி இடம் உண்டு. திருமணம் மற்றும் விழாக்களின் போது ப்ரைமர் பயன்படுத்தி பிரகாசமாக ஜொலிக்கலாம்.

நீண்டநேர மேக்கப்
நீண்டநேர மேக்கப்AI image

முகத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்திய பிறகு செட்டிங் ஸ்ப்ரேயை லேசாக முகத்தில் ஸ்பிரே செய்து நன்றாக காயவிட வேண்டும். நன்றாக செட்டிங் ஸ்பிரேயை காயவிட்டு மேக்கப் போடுவதன் மூலம் வியர்வை மற்றும் ஈரப்பதத்தில் இருந்து விடுபட்டு நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் பாதுகாக்கலாம். மேக்கப்பை செட்டிங் ஸ்ப்ரே நீண்ட நேரம் புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நாள் முழுவதும் எந்த டென்ஷனும் இல்லாமல் விழாக்கள் மற்றும் திருமணங்களில் ஃபோஸ் கொடுத்து வலம் வரலாம்.

முகத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி நீண்டநேர மேக்கப் தரும் பிளாட்டிங் பேப்பர்!

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணைய் மற்றும் வியர்வையை உறிஞ்சும் கருவியாக பிளாட்டிங் பேப்பர் உள்ளது. வியர்வை மற்றும் எண்ணெயை பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுவதால் மேக்கப் நாள் முழுவதும் கலையாமல் பொலிவாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

முகத்தில் அதிக எண்ணெய் வழியும் பகுதிகளான நெற்றி மூக்கு கன்னங்களின் ஓரங்களில் வெளியாகும் அதிகப்படியான எண்ணெய் பசையை லேசாக அழுத்தி எடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் சௌகரியமான உணர்வை பெறுவீர்கள்.

ஈரப்பதம், வியர்வையை கட்டுப்படுத்தும் பவுடர் பவுண்டேஷன்:

முகத்தில் வழியும் வியர்வை, ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஃபவுடர் பவுண்டேஷன் சிறந்த தேர்வாக உள்ளது. முகத்தை நன்றாக சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்திய பிறகு பவுடர் பவுண்டேஷனை முகம் முழுவதும் லேசாக தடவவேண்டும். முகத்திற்கு மேட் தோற்றத்தை கொடுக்கும் பவுடர் பவுண்டேஷன் மென்மையாக மேக்கப்பை தெரிய வைப்பதுடன் வியர்வை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்பாட்டில் வைத்து முகத்தை பாதுகாக்கும். மேக்கப் மீது அதிக ஆர்வம் கொண்ட பெண்கள் கட்டாயமாக திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.

பொலிவான முகத்திற்கு மேக்கப் ரெப்ரெஷிங் ஸ்பிரே:

மேக்கப்பை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைக்க ரெப்ரெசிங் ஸ்பிரே பயன்படுத்த வேண்டும். நெற்றி, மூக்கு மற்றும் கன்னங்களின் ஓரங்கள் என எண்ணெய் வெளியாகும் பகுதிகளில் லேசாக மேக்கப் ரெப்ரெசிங் ஸ்பிரேயை தெளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரிசப்ஷனில் கெத்து காட்டலாம்! மணமகள்களை மயக்கும் டாப் 5 லேட்டஸ்ட் சேலை வகைகள்!
நீண்டநேர மேக்கப்

இவ்வாறு தெளிப்பதன் மூலம் மேக்கப் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், மென்மையாக இருக்கும் என்பதால் நாள் முழுவதும் பிரைட் ஆக காட்சி தருவீர்கள். மேற்கூறிய எளிய அழகு குறிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் மேக்கப் போடும் பெண்கள் தேவதைபோல காட்சி தரலாம்.

இந்த எளிய அழகு குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், விசேஷங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் வியர்வை மற்றும் எண்ணெய் பசையினால் மேக்கப் கலைந்துவிடுமோ என்ற கவலை இனி உங்களுக்கு வராது. நாள் முழுவதும் உங்களது முகப் பொலிவு குறையாமல், புகைப்படங்களில் தேவதை போன்ற அழகான தோற்றத்துடன் வலம் வரும் தாரகையாக நீங்கள் மாறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com