
மரிக்கொழுந்தை நாம் அதன் வாசனைக்காக மட்டுமே அறிவோம். ஆனால் அது எண்ணெய்த்தன்மையையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு இயற்கை மூலிகை. உச்சி முதல் பாதம் வரை சருமத்தை மென்மையாக்கும் தன்மை மரிக்கொழுந்திற்கு உண்டு.
எனவே மரிக்கொழுந்தை எண்ணையாகக் காய்ச்சி உடல் முழுவதும் தடவிக்கொள்ளலாம். இது வறண்ட கேசத்தை மென்மையாக்கும். ஸ்கால்பை கண்டிஷனர் செய்து மென்மையாக்கி முடியை நெருக்கமாக வளரச்செய்யும்.
மரிக்கொழுந்து எண்ணெய்
கால் லிட்டர் தேங்காய் எண்ணையில் 100 கிராம் குச்சிகள் நீக்கப்பட்ட ஃப்ரெஷ்ஷான மரிக்கொழுந்து இலைகளைப் போட்டுக் காய்ச்சவும் தைலப்பதத்துக்கு வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் வெட்டி வேரைக் சேர்த்து ஆறியதும் ஒரு பாட்டிலில் வைக்கவும் இந்த எண்ணெய் தலைக்கு மட்டுமல்லாமல் பாதங்கள் மற்றும் நகங்களில் தொடர்ந்து தடவி வரும்போது சொரசொரப்புத் தன்மை மறைந்து மென்மையாகும்.
நகங்கள் உடையாமல் இருக்கும் பாத வெடிப்புக்கு நிவாரணம் தரும். வாரம் இருமுறை இந்த எண்ணையை சிறிது சூடாக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம்.
மரிக்கொழுந்து ஃபேஸ் பேக்
முதல்நாள் இரவு ஒரு ஸ்பூன் கடலை பருப்பை ஊறவைக்கவும். மறுநாள் காலை இதனுடன் ஒரு டீஸ்பூன் பால், இரண்டு டீஸ்பூன் மரிக்கோழுந்து இலைகளை அரைத்து பேஸ்ட் ஆக்கவும். இதை முகத்தில் பேக்காக் போட்டு வந்தால் மென்மையான மாசு மருவற்ற முகம் கிடைக்கும்.
மணம் தரும் அற்புத மூலிகை மரிக்கொழுந்து. இது பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. வீக்கத்தை வற்றச்செய்கிறது. மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி மூட்டுவலிக்கு மருந்து தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்தை சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலையில் பற்றுப்போட தலைவலி தீரும்.
மரிக்கொழுந்தை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் அரிப்பு சிவப்புத் தன்மையை நீக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணை எடுக்கவும். இதனுடன் நீர் விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுதை சேர்த்து காய்ச்சவும் இதை வடிகட்டி பயன்படுத்தினர் சரும நோய்கள் குணமாகின்றன. அரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மரிக்கொழுந்து போக்குகிறது.