பெண்களுக்கு எதனால் அதிகமாக முடி உதிரும் தெரியுமா?

Hair Fall
Main Reasons for Excessive Hair Fall in Women

முடி உதிர்வுப் பிரச்சினை என்பது ஆண் பெண் என அனைவருக்குமே ஒரு பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்வுப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலமாக, அதிக முடி உதிர்வை எதிர்கொள்ளும் பெண்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். இந்த பதிவில் பெண்களின் முடி உதிர்வுக்கான சில முக்கிய காரணங்கள் பற்றி பார்க்கலாம். 

ஹார்மோன் பிரச்சனை: கர்ப்பம், பிரசவம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பெண்களின் அடிக்கப்படியான முடி உதிர்வுக்கு காரணமாகின்றன. எனவே உங்களது முடி உதிர்வுக்கு காரணமான ஹார்மோன் பிரச்சனையைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்ய ஒரு சுகாதார நிபுணரை அணுகவும். 

மன அழுத்தம்: பெண்களின் முடி உதிர்வுக்கு மன அழுத்தம் ஒரு பொதுவான காரணமாகும். உணர்வு அல்லது உடல் ரீதியான மன அழுத்தம் முடி வளர்ச்சியை சீர்குலைத்து, மயிர்க்கால்களை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக பெண்கள் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள். மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உடற்பயிற்சி, தியானம் போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள். 

ஊட்டச்சத்து குறைபாடு: போதுமான ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளவில்லை என்றால் அது உங்களது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இரும்பு, பயோட்டின், துத்தநாகம் மற்றும் விட்டமின் டி போன்ற அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்களில் பற்றாக்குறை ஏற்படும்போது முடி பலவீனமடைந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும். எனவே பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகவற்றை உள்ளடக்கிய சீரான உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

அதிகப்படியான ஸ்டைலிங்: உங்கள் தலைமுடியை அதிகமாக ஸ்டைலிங் செய்வது மற்றும் கலரிங், ஸ்ட்ரைடெனிங் போன்ற வெப்ப ஸ்டைலிங் கருவிகளை அதிகமாக பயன்படுத்துவது முடியின் தண்டை சேதப்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான வெப்பம் முடியை வலுவிழக்கச் செய்து அதன் ஆரோக்கியத்தை பாதிக்கும். 

உச்சந்தலை பாதிப்புகள்: பொடுகு, உச்சந்தலையில் தோல் அலர்ஜி அல்லது பூஞ்சை தொற்று போன்ற சில பாதிப்புகளும் முடி உதிர்தலுக்கு பங்களிக்கும். இந்த நிலைமைகள் அரிப்பு, வீக்கம் மற்றும் முடி உதிர்வு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே முறையாக உச்சந்தலையை பராமரித்து ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதற்கான சிகிச்சை மேற்கொள்வது மூலமாக முடி உதிர்வை குறைக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
Northern Fulmar: ஆபத்து வந்தால் வாந்தி எடுக்கும் பறவை! 
Hair Fall

இது தவிர, சில ஆட்டோ இம்யூன் நோய்கள், பாலிசிஸ்டிக் ஓவேரி சின்ரோம் மற்றும் அலோபிசியா போன்ற சில மருத்துவ நிலைமைகள் காரணமாகவும் பெண்களுக்கு அதிகமான முடி உதிர்வு ஏற்படலாம். மேலும் சில பெண்கள் தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிடுவது மூலமாகவும் அதன் பக்க விளைவாக முடி உதிர்வை சந்திக்கலாம். இதில் என்ன காரணத்திற்காக உங்களுக்கு முடி உதிர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, மருத்துவரை அணுகி உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com