Northern Fulmar: ஆபத்து வந்தால் வாந்தி எடுக்கும் பறவை! 

Northern Fulmar
Northern Fulmar: Vomiting Bird

வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலின் பறந்த நிலப்பரப்பில் Northern Fulmar எனப்படும் குறிப்பிடத்தக்க கடற்பறவை இனம் வாழ்ந்து வருகிறது. முதலில் இந்த பறவையைப் பார்ப்பதற்கு சாதாரணமாகவே தோன்றினாலும், இது முற்றிலும் வித்தியாசமான Defensive மெக்கானிசத்தைப் பயன்படுத்தி ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. ஆபத்து சமயங்களில் துர்நாற்றம் வீசும் எண்ணெயை வாந்தி எடுக்கும் தனித்துவமான திறன் இந்த பறவைக்கு உள்ளது. சரி வாருங்கள் இப்பறவையின் புதிரான நடத்திக்கு பின்னால் உள்ள ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த பறவை ஏதேனும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போது ஒரு வழக்கத்திற்கு மாறான தற்காப்பு முறையை பயன்படுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. அதாவது கடுமையான வாசனையைக் கொண்ட, ஒரு விதமான எண்ணெயை பலவந்தமாக வெளியேற்றுகிறது. தன்னை வேட்டையாட வரும் விலங்குகளை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த பறவை இப்படி செய்கிறது. இந்த பாதுகாப்பு முறை ஒரு சக்தி வாய்ந்த தடுப்பாக செயல்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் இந்த பறவையிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது. 

இதை வேட்டையாட வரும் மற்ற பறவைகள், அதன் வாந்திக்கு பயப்படுவதற்கான மற்றொரு காரணம், அந்த பிசுபிசுப்பான வாந்தி, ரெக்கைகளில் ஒட்டிக் கொள்ளும் தன்மை படைத்தது. இதனால் தாக்கப்படும் பறவையின் பறக்கும் திறன் குறைந்துவிடும் என்பதால், மற்ற வேட்டையாடும் பறவைகள் Northern Fulmar அருகே நெருங்க பயப்படுகின்றன. 

ஆபத்தான எண்ணெய்: Northern Fulmar பறவைகளின் வயிற்றில் இருக்கும் எண்ணெய், முற்றிலும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டதாகும். இது கொழுப்பு அமிலங்கள் மற்றும் வயிற்று அமிலங்களின் கலவையாகும். பறவை உணவாக உட்கொள்ளும் கடல் மீன்களில் இருந்து அந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பறவையின் இரைப்பை, மீனிலிருந்து பிரிக்கப்படும் எண்ணெய்க்கு மோசமான வாசனையை அளிக்கிறது. இதுவே வேட்டையாடும் விலங்குகளைத் தடுத்து புல்மார் பறவைக்கு பாதுகாப்பை வழங்குகிறது. 

இதையும் படியுங்கள்:
Milk Burfi Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் பர்பி வீட்டிலேயே செய்யலாமே! 
Northern Fulmar

இந்த பறவைகள் வாழும் ஆர்டிக் கடற்பகுதியானது, பல கடுமையான சூழ்நிலைகளையும், வேட்டையாடும் விலங்குகளையும் கொண்டுள்ளதால், இவற்றின் வாந்தி எடுக்கும் நடத்தையைப் பயன்படுத்தி இவை நீண்ட காலம் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக தனது குஞ்சுகளுக்கு எந்த அச்சுறுத்தல்களும் வராத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு இந்த தற்காப்பு முறை பெரிதளவில் பயன்படுகிறது. 

ஒரு பறவை தன்னை வாந்தி எடுத்து தற்காத்துக்கொள்கிறது என்பதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதுபோன்ற விஷயங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இயற்கை எந்த அளவுக்கு விசித்திரமானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com