அழகே உன் விலை என்ன?

Azhage Un Vilai Enna?
bridal makeup
Published on

முன்பெல்லாம் பியூட்டி பார்லருக்கு சென்றால் நாம என்ன செய்ய சொல்கிறோமோ அதை மட்டும் செய்து விட்டு விடுவார்கள். நம் முகத்தை வைத்தே நம் ஆசையை கண்டுபிடித்து ஃபேஷியல் பண்ணினா முகம் இன்னும் பளிச்சின்னு ஜொலிக்கும் மேடம் அப்படின்னு சொல்லி பார்ப்பாங்க. ஆனால் இப்பல்லாம் பியூட்டி பார்லர்குள்ளே போனாலே பெரிய ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஒரு மெனு கார்டு கொடுக்கிறார்கள்.

அதில் ஃபேஷியல் பத்து வகை, பெடிக்யூர் 4 வகை, மெனிக்யூர்ல நாலு வகை, ஹேர் கலரிங் 4 வகை போட்டு விலையையும் போட்டிருப்பாங்க. படிச்சா அவ்வளவுதான் தல கிர்ருனு சுத்த ஆரம்பிச்சுடும்.

ரொம்ப வற்புறுத்தறாங்களேன்னு குறைவான பட்ஜெட்டில் உள்ள ஒன்றை செய்ய சொல்லிவிட்டால் அவ்வளவுதான் 'மேடம் உங்களுக்கு இது சூட்டாகாது' என்று யானை விலை குதிரை விலை இருக்கும் ஐட்டத்தை செய்யச் சொல்வார்கள்.

அதனால மக்களே பியூட்டி பார்லருக்குள்ளே போக முடிவு பண்ணிட்டா உள்ள போறதுக்கு முன்னாடி என்ன செய்யணும்னு முடிவு பண்ணிட்டு போங்க. இல்லை என்றால் உங்க கதை கந்தல்தான். பெரிய பட்ஜெட்டுக்கு சூடுவைத்து விடுவார்கள். இதில் விதவிதமான கிரீம்கள் வேறு விற்பனை செய்கிறார்கள்.

பிரைடல் மேக்கப் என்று ஒன்று. அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு கல்யாணப் பெண்ணையே குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள். மெஹந்தியில் ஆரம்பித்து மேக்கப் போடுவது, புடவை கட்டி விடுவது என விதவிதமாக அலங்காரம் செய்வதும், ஹேர் ஸ்டைலில் வித்தியாசம் காட்டுவதும் என பெண்ணையே அடையாளம் தெரியாத மாதிரி மாத்தி காட்டுவதுமாக பியூட்டி பார்லர் செய்யும் அலப்பறை தாங்க முடியாது. 

இதையும் படியுங்கள்:
ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள் தெரியுமா?
Azhage Un Vilai Enna?

கல்யாண பெண் மேடையில் வந்ததும்தான் தெரியும் இது நம்ம கமலாவா? பொண்ணே மாறிப்போச்சே அடையாளம் தெரியாம என்று வியக்கும் அளவில் மாற்றி விடுவார்கள்.

தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கு விதவிதமான சாக்லேட், பிஸ்கட் விளம்பரம் செய்து இழுப்பதுபோல எத்தனை அழகு பொருட்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன.

ஆரோக்கியமான நீண்ட கூந்தல் வேண்டுமா? இதை யூஸ் பண்ணுங்க! சிகப்பழகுக்கு இந்த கிரீம்; சரும பராமரிப்பா பிடிங்க இந்த லோஷனை என்று எத்தனை எத்தனை விளம்பரங்கள்! பார்க்கும் பொழுதே கண்ணை கட்டுகிறதே. விலையை கேட்டால் அசந்துதான் போவோம்.

அழகாக இருக்க எல்லோருக்குமே ஆசைதான். அதற்காக இவ்வளவு காஸ்டிலியாக மாத வருமானத்தில் ஒரு பங்கையே கட்டாயம் வைக்க வேண்டிய நிலைக்கு அல்லவா நம்மைத் தள்ளுகிறது.

முன்பெல்லாம் மேக்கப் என்றால் ஒரு லிப்ஸ்டிக், ஒரு ஐப்ரோ பென்சில், ரோஸ் பவுடர் மட்டுமே இருந்த காலம் இப்போது மலையேறிப்போய் விதவிதமான கிரீம்களும், ஆயில்களும், மேக்கப் சாதனங்களும் வந்து நம்மை கலங்கடிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com