மேக்கப் பிரஷ்கள்…பராமரிக்கும் வழிமுறைகள்!

makeup brush...
makeup brush...Image credit - pixabay.com

முன்பெல்லாம் மேக்கப் என்பது பவுடர், கண் மை இவ்வளவே. இன்றோ முகம் நெற்றி கன்னம் கழுத்து உதடு காது என ஒவ்வொரு அங்கங்களுக்கும் விதவிதமான மேக்கப், அதற்கான சாதனங்கள், பிரஷ்கள் என பலவிதமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை உபயோகிப்பதை விட பராமரிப்பதில்தான் அதன் ஆயுள், பயன்பாடுகள் நீண்ட காலத்திற்கு பயன்படும். சரும ஆரோக்யத்திற்கும் பிரஷ்களின் சுத்தம் அவசியமாகிறது. சரியாக பராமரிக்காமல் உள்ள பிரஷ்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஏற்பட்டு பிரஷ்ஷை பாழ்படுத்தி விடுவதோடு போடும் நபருக்கும் அலர்ஜியை உண்டு பண்ணிவிடும்.

பிரஷ்ஷை அதன் பயன்பாடு முடிந்தவுடன் நன்கு கழுவி உலர்த்த வேண்டும். மேக்கப் பிரஷ்களை கழுவ பிரத்யேக கிளீனர்கள் உள்ளன. இவை ப்ரஷ்களில் உள்ள அழுக்குகளை யும், பிசுபிசுப்பையும் ஜென்டிலாக நீக்கும். இது தவிர மென்மையான சோப் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

makeup brush...
makeup brush...Image credit - pixabay.com

பிரஷ்ஷை சுத்தம் செய்ய பிரஷ் மேட்  என கடைகளில் கிடைக்கும். இது பிரஷ்ல் படிந்துள்ள க்ரீம், கறைகளைப் போக்கும். பிரஷ்களை சுத்தம் செய்யும்போது நீண்ட நேரம் ஊறவைக்கக் கூடாது. இது இவைகளைப் பிணைக்கும் பசைகளை தளர்த்தி, அவற்றை உதிரச் செய்யும். சுத்தம் செய்தவுடன் நன்கு உலர்த்தி அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
செம டேஸ்டான 'தேங்காய் போளியும் வெண்டைக்காய் பகோடாவும்' செய்யலாம் வாங்க!
makeup brush...

இழைகளைப் பிடித்து இழுக்கக் கூடாது. கழுவிய பின் சுத்தமான டிரே அல்லது துண்டில் இடைவெளி விட்டு அடுக்கி காய விட வேண்டும். மேக்கப் பிரஷ்கள் தரமானதாக, பிராண்டட் ஆக இருத்தல் நல்லது. இதைக் கொண்டு மேக்கப் போடும்போது மென்மையாகவும், பர்ஃபெக்ட் ஆகவும் போட முடியும்.

பிரஷ்களை எப்போதும் அதற்குரிய பவுச் அல்லது பைகளில் போட்டு வைக்க நீண்ட நாள் அதன் தரம் மாறாமல் அப்படியே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com