செம டேஸ்டான 'தேங்காய் போளியும் வெண்டைக்காய் பகோடாவும்' செய்யலாம் வாங்க!

Coconut poli
Coconut Poli and Ladies Finger Pagoda RecipeImage Credits: Raks Kitchen
Published on

இன்னைக்கு நம்ம டீ டைம் ஸ்னாக்ஸாக சுவையான தேங்காய் போளி மற்றும் வெண்டைக்காய் பகோடா எப்படி செய்யறதுன்னு தான் பார்க்க போறோம்.  இதை எளிமையா வீட்டிலேயே சட்டுன்னு செஞ்சிடலாம் வாங்க.

தேங்காய் போளி செய்ய தேவையான பொருட்கள்:

  • தேங்காய்-2கப்.

  • வெல்லம்-1 ½ கப்.

  • நெய்-தேவையான அளவு.

  • ஏலக்காய் தூள்-1 சிட்டிகை.

  • மைதா-3கப்.

  • மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

  • உப்பு- 1 தேக்கரண்டி.

  • எண்ணெய்-1/4 கப்.

தேங்காய் போளி செய்முறை விளக்கம்:

முதலில் மிக்ஸியில் 2கப் தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். இதனுடன் 1 ½ கப் வெல்லம் மூன்று தேக்கரண்டி தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பேனில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய், 1 சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிண்டவும். நன்றாக கெட்டியாகி வந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் 3கப் மைதா, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அத்துடன் ¼ கப் எண்ணெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

இப்போது ரெடி பண்ணி வைத்திருக்கும் பூரணத்தை உருண்டை பிடித்து மாவு சிறிது எடுத்து அதற்குள் பூரணத்தை வைத்து ஒரு பிளேஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி அதன் மீது மாவை வைத்து தட்டினால், சப்பாத்தி போன்று வந்துவிடும். இதை மெலிதாக தட்ட வேண்டும். இப்போது சூடான தோசைக்கல்லில் நெய் விட்டு செய்து வைத்திருக்கும் போளியை இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான போளி தயார். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

வெண்டைக்காய் பகோடா செய்ய தேவையான பொருட்கள்:

  • வெண்டைக்காய்- 1 கப்.

  • கடலை மாவு-1 கப்.

  • மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

  • மஞ்சள் தூள்- சிறிதளவு.

  • உப்பு- தேவையான அளவு.

  • எண்ணெய்- தேவையான அளவு.

  • ஓமம்- சிறிதளவு.

  • தயிர்- 1 தேக்கரண்டி.

வெண்டைக்காய் பகோடா செய்முறை விளக்கம்:

வெண்டைக்காயை சின்னதாக வெட்டிக்கொண்டு வெயிலில் 10 நிமிடம் காய வைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு 1 கப், மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, ஓமம் சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு, தயிர் 1 தேக்கரண்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
காஷ்மீரின் ஸ்பெஷல் ‘பிங்க் டீ’ பற்றித் தெரியுமா?
Coconut poli

அதில் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாகும் வரை காத்திருந்து, அதில் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போடவும். வெண்டைக்காய் நன்றாக பொண்ணிறமாகும் வரை விட்டு எடுக்கவும். இப்போது சுவையான வெண்டைக்காய் பகோடா தயார். வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த ரெசிப்பியை ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com