Makeup Fixer & Setting Spray: என்ன வேறுபாடு தெரியுமா?
ஃபௌண்டேஷன், மாய்ஸ்சுரைசர், டோனர், பவுடர், ஸ்ப்ரே, சன் ஸ்க்ரீன், ஐ லைனர், ஐ லேஷஸ், லிப் பால்ம், லிப் ஸ்டிக். எப்பப்பா… ஒரு முகத்தை அழகாக்க இன்னும் எத்தனை எத்தனைப் பொருட்கள் உள்ளனவோ?
பலருக்கு டோனருக்கும் மாய்ஸ்சுரைசருக்குமே குழப்பங்கள் ஏற்படுகின்றன. இன்னும் அனைத்து மேக்கப் பொருட்களையும் தெரிந்துக்கொண்டால், அவ்வளவுதான். எது எப்படியாயினும், இப்போது Makeup Fixer மற்றும் Setting Spray-க்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மட்டும் பார்ப்போம்.
Makeup Fixer மற்றும் Setting Spray: இவை இரண்டுமே ஃபௌண்டேஷன் போட்டு பயன்படுத்துபவைதான். ஆனால், எதற்கு இவ்விரண்டையும் பயன்படுத்த வேண்டும்? ஒன்று மட்டும் பயன்படுத்தினால் என்ன? என்ற அடிப்படைக் கேள்விகள் எழலாம்.
முதலில் Makeup Fixer பற்றிப் பார்ப்போம்.
இந்த ஸ்ப்ரேக்கள் மேக்கப் நீண்ட நேரம் நீடித்திருக்க உதவுகின்றன. ஒரு முழு நாள் முழுவதும்கூட நீடிக்க உதவும். மேக்கப்பைப் பாதுகாக்கும் மூடுபனி என்றும் இதை விவரிக்கலாம். மேக்கப் ஃபிக்ஸர் ஸ்ப்ரே, உடற்பயிற்சி சமயங்கள், வெப்பமான கோடை நாட்கள், வியர்வைகள் ஏற்படும் நேரங்கள் மற்றும் மழையின் போது பயன்படுத்த சிறந்தது. இது ஒப்பனையின் கடைசி படியாகும். இந்த ஸ்ப்ரேயை சருமத்தில் பயன்படுத்தினால் மேக்கப் அப்படியே இருக்கும்.
இந்த ஸ்ப்ரேயின் மூலப்பொருள் ஆல்கஹால் ஆகும். இந்த ஸ்ப்ரே பயன்படுத்திய பின்னர், தவறுதலாக உராய்வு ஏற்பட்டால் கூட மேக்கப் கலையாது.
பல்வேறு வகையான மேக்கப் ஃபிக்ஸர்கள் உள்ளன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மேக்கப் ஃபிக்ஸர்களைப் பார்த்து வாங்குவது நல்லது.
எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு: மேக்கப்பில் மேட்டிஃபை (Mattify) செய்யும் பொருட்களைக் கொண்ட மேக்கப் ஃபிக்ஸர் ஸ்ப்ரேயைத் தேர்வு செய்யவும்.
வறண்ட சருமத்திற்கு: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய மேக்கப் ஃபிக்ஸர் ஸ்ப்ரேயைத் தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் தருகிறது.
Setting Spray:
செட்டிங் ஸ்ப்ரேக்கள் என்பது மேக்கப் போட்ட பிறகு முகத்தில் லேசாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அடித்தளம், ப்ளஷ், மற்றும் பவுடர் என அனைத்து அடுக்குகளையும் மென்மையாகவும், சமநிலையாகவும் மாற்ற உதவும். இது உங்கள் முகத்தை ஈரப்பதமாகவும், அதேசமயம் எண்ணெய்யை உலர்த்தும் விதமாகவும் உதவி செய்யும். ஏனெனில், இந்த ஸ்ப்ரேவில் நீர், பழச்சாறு, எண்ணெய் தன்மை, க்ளிசரின் என அனைத்தும் உள்ளன.
செட்டிங் ஸ்ப்ரே ஒரு நீட்டான லுக்கைத் தருகிறது. அதேசமயம், மேக்கப் ஃபிக்ஸர் ஈரப்பதம் மற்றும் வியர்வையிலிருந்து மேக்கப்பை காப்பதன் மூலம், நீண்ட நேர மேக்கப்பை வழங்குகிறது.
இந்த இரண்டையும் எப்போது பயன்படுத்துவது?
1. ஒப்பனைக்கு முன் ஒரு புத்துணர்ச்சியூட்டும் Mist ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள்.
2. உங்கள் மேக்கப்பைப் பயன்படுத்திய பிறகு, செட்டிங் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
3. இப்போது, செட்டிங் ஸ்ப்ரே முழுவதுமாக காய்ந்தவுடன் ஃபிக்ஸிங் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தவும்.
4. இந்த இரண்டு ஸ்ப்ரேக்களையும் நீங்கள் பயன்படுத்தும்போது, ஸ்ப்ரே பாட்டில்களை அசைத்து, முகத்தில் X மற்றும் T வடிவில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.
5. தெளித்த பிறகு, அதை உலர அனுமதிக்கவும்.