பழங்களை வைத்தே முகத்திற்கு சீரம் தயாரிக்கலாமே!

Serum
Making Serum Using Fruits

சீரம் என்பது சருமப் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இவை குறிப்பாக சரும பாதிப்புகளை சரி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. என்னதான் சந்தையில் பல சீரம்கள் இருந்தாலும் பழங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே நாம் இயற்கையான முறையில் சீரம் உருவாக்கலாம். உங்களது சரும பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சீரம் தயாரிப்பது, உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துயிர் கொடுக்கும் ஒரு இயற்கையான வழியாகும். 

பழங்களை வைத்து வீட்டிலேயே சீரம் தயாரிப்பது எப்படி?  

ஒவ்வொரு பழத்திற்கும் சருமத்திற்கு வெவ்வேறு விதமான நன்மைகளை அளிக்கும் பண்புகள் உள்ளன. உதாரணத்திற்கு ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை பிரகாசமாகி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும் ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. அவை சருமத்தை சேதம் மற்றும் விரைவான வயதான தோற்றத்திலிருந்து பாதுகாக்கும். உங்களது சரும பாதிப்புக்கு ஏற்ற வகையில் பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.  

பழத்தை தேர்வு செய்ததும் அழுக்கு மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற அவற்றை நன்கு கழுவவும். பழத்தை உரித்து அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்து சாற்றை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கவும். 

பிரித்தெடுத்த ஜூசை சீரமாக மாற்றுவதற்கு அதை மற்றொரு பொருளுடன் கலக்க வேண்டும். இதற்காக பிரபலமாகப் பரிந்துரைக்கப்படுவது, கற்றாழை ஜெல், காய்கறி கிளன்சர் அல்லது ஹைலூரோனிக் அமிலம். இந்தப் பொருட்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி பழத்தின் ஊட்டச்சத்துக்களை முகம் உறிஞ்ச உதவுகிறது. 

இறுதியாக இந்தக் கலவையை சுத்தமான காற்று புகாத பாட்டிலில் அடைத்து வெளிச்சம் படாத இடத்தில் சேமிக்க வேண்டும். இதன் ஆயுளை நீட்டிக்க பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது நல்லது. தினசரி இந்த சீரத்தை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இத்துடன் மாய்ஸ்சரைசர் அல்லது சன் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது உங்களது சருமத்திற்கு மேலும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒரு மனிதனை திமிங்கலம் விழுங்கினால் என்ன ஆகும்? அடக்கடவுளே! 
Serum

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களே வீட்டில் இயற்கையான முறையில் சீரம்களை உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பழசீரம் பிரபலமாக சந்தையில் கிடைக்கும் சீரத்தைப் போன்ற ஆற்றல் மற்றும் உறுதித் தன்மையை கொண்டிருக்காது. இதைக் கருத்தில் கொண்டு, உங்களது சீரத்தை நீண்ட நாள் பயன்படுத்தாமல், குறுகிய காலத்திற்குப் பயன்படுத்தி, தேவைப்படும்போது புதிதாக அவ்வப்போது தயாரித்துக் கொள்ளவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com