
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் உடல் வடிவமைப்பை அவர்களின் வடிவங்கள் அல்லது உடல்வாகு என்று குறிப்பிடுகிறார்கள். பெண்களின் வடிவங்கள் என்பது அவர்களின் உடல்வாகு அமைப்பை குறிக்கும் பொதுவாக பெண்களை ஆப்பிள் வடிவம் மற்றும் பேரிக்காய் வடிவம் என்று வகைப்படுத்துவார்கள்.
இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள்தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள். இந்த மாதிரி உள்ளவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான்.
பேரிக்காய் வடிவிலான பெண்களை விட ஆப்பிள் வடிவிலான பேர்களுக்குத்தான் அதிக நோய்கள் குறிப்பாக இதயம் மற்றும் இரத்த அழுத்த குறைபாடு நோய்கள் அதிகம் வருவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
முதல் முறையாக ஆண்களை நான்கு வடிவங்களாக வகைப்படுத்தியது இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான "ஹை அன்ட் மைட்டி" (High and Mighty) தான். அந்த நான்கு வகையான ஆண்களின் வடிவங்கள் (Men's body shapes) என்னென்ன என்பதை பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் புட்டிங் (Christmas Pudding): இது பிரபலமான கேக் வகை. மேல் பகுதி குறுகியும், கீழ் பகுதி அகன்றும் இருக்கும் வடிவம் . ஆண்களின் உடல் அமைப்பு மேலே குறுகியும் நடுவில் இடுப்பு பகுதி பருமனான தோற்றம் கொண்ட வடிவை பெற்ற ஆண்களை "கிறிஸ்துமஸ் புட்டிங்" உடல் வாகு ஆண்கள் என்கிறார்கள். மார்பை விட இடுப்பு மற்றும் இடுப்பைச் சுற்றி சதைப்பிடிப்பும் கொண்ட ஆண்களை தற்போது முக்கோண வடிவ உடல் வாகு ஆண்கள் என்கிறார்கள்.
யேல் லாக் (yule log): யேல் மரக்கட்டை வடிவில் ஒரு கேக் அதை யேல் கேக் என்பார்கள் அது இங்கிலாந்து நாட்டில் பேமஸ். இது நீள வாக்கில் ஒரே மாதிரியாக இருக்கும். தோள்பட்டையும், இடுப்பும் அகலத்தில் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் உடல் வாகு. கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். இந்த மாதிரி வடிவம் கொண்ட ஆண்களை யேல் லாக் வடிவ ஆண்கள் என்கிறார்கள்.
பார்ஸ்னிப் (Parsnip): இது கேரட் மாதிரியான வடிவம் கொண்ட மஞ்சள் நிற கிழங்கு. மேலே பருமனாகவும் கீழ் பகுதி ஒல்லியாகவும் தோன்றும் வடிவத்தை கொண்ட ஆண்களை "பார்ஸ்னிப்" வடிவமைப்பு கொண்ட ஆண்கள் என்பர். மார்பு மற்றும் தோள்கள், உங்கள் இடுப்பு மற்றும் இடுப்பை விட கணிசமாக அகலமாக இருக்கும் உடலின் மேல் பகுதி கீழ் பகுதியைவிட அகலமாக இருக்கும் இந்த உடல் வாகு கொண்ட ஆண்களை தற்போது" V" வடிவ அல்லது தலைகீழ் முக்கோண வடிவ உடல் வாகு கொண்ட ஆண்கள் என்கிறார்கள்.
கேண்டில் (candle): மெழுகுவர்த்தி போன்று உயரமாக ஒல்லியான வடிவமைப்பில் இருப்பவர்களை கேன்டில் உடல் வாகு கொண்ட ஆண்கள் என்கிறார்கள்.
உங்கள் உடல் வடிவத்தை அறிந்துகொள்வது, வாழ்க்கை முறை சார்ந்த முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுகிறது. உங்களது உடல் வாகு தெரிந்தால்தான் அதற்கேற்ப உங்களது ஆடைகளை தேர்வு செய்ய முடியும். உங்கள் உடல் வடிவத்தை பூர்த்தி செய்யும் ஆடை உங்கள் ஸ்டைலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள்.