ஸ்மார்ட் லுக் வேண்டுமா? முக வடிவத்திற்கு ஏற்ப ஹேர் ஸ்டைலை தேர்வு செய்வது எப்படி?

mens-hair-style
mens-hair-style
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ண்கள் தங்கள் முக அமைப்புக்கு ஏற்பவும், எளிதாக பராமரிக்கக் கூடிய வகையிலும் ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுப்பது நல்லது. ஹேர் கட் செய்வதற்கு முன்பு ஆண்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்தலாம். முக்கியமாக அவர்களுடைய முக அமைப்பு, முடி வளரும் தன்மை, முடியின் அடர்த்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு ஹேர்கட்டை தேர்வு செய்யவேண்டும்.

*சிலருக்கு முன் நெற்றியில் முடி குறைவாக இருக்கும். இவர்கள் நெற்றியின் முன் பகுதியிலுள்ள முடியை அதிகம் வெட்டக்கூடாது.

*முக அமைப்புக்கு ஏற்றவாறு ஹேர்கட் செய்து கொள்ளும் பொழுது தாடியையும் மறக்காமல் ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*சிலருக்குத் தாடை பெரியதாக இருக்கும். இவர்கள் அழகான லுக் பெறுவதற்கு ஷார்ட் ஹேர்கட் செய்யக் கூடாது. ஓவல் முக அமைப்புக் கொண்டவர்கள் நெற்றியில் முடி விழுவது போல் ஹேர்ஸ்டைல் செய்துகொள்ள பார்வையாக இருக்கும்.

*முடிக்கு ஏற்றார் போல் தரமான ஹேர் ஜெல், ஷாம்பு, கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும்.

*வாரத்திற்கு 2-3 முறை மென்மையான ஷாம்பு கொண்டு முடியை அலசலாம். முடி வறட்சியைத் தவிர்க்க கண்டிஷனரை பயன்படுத்தவும்.

*ஹேர் ஸ்டைலை பராமரிக்க 20 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை சரியான இடைவெளிவிட்டு ஹேர்கட் செய்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரியம் மற்றும் ஆரோக்கியம்: ஏன் கோடையில் காட்டன் புடவைகளை அணியவேண்டும்?
mens-hair-style

*முடி அதிகம் கொட்டாமல் இருக்க ஹேர் டிரையர் பயன்படுத்தும் பொழுது வெப்பப் பாதுகாப்பு (Heat Protectant) ஸ்ப்ரே பயன்படுத்தவும்.

*அதிகப்படியான ஸ்டைலிங், ஷைனிங் லுக் தேவைப்படுபவர்கள் ஜெல் உபயோகிக்கலாம். ஸ்டைலை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்க ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

*புரதம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள முடி ஆரோக்கியமாக இருக்கும்.

தற்போதைய ட்ரெண்டிங் ஸ்டைல்கள்: 

ஃபேட் கட் (Fade Cut):

பக்கவாட்டில் மற்றும் பின்னால் முடியை மிகவும் குறுகியதாக வெட்டி, மேலே உள்ள முடியை சற்று நீளமாக வைத்திருக்கும் இந்த ஸ்டைல் இப்போது மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

பஸ் கட்(Buzz Cut):

ஹேர் கிளிப்பர்களைப் பயன்படுத்தி முடியை மிகவும் குறுகியதாக வெட்டும் ஒரு எளிய, குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஹேர் ஸ்டைல் இது. தலை முழுவதும் மிகக் குறைந்த அளவில் முடியை வெட்டுவது. இது மெல்லிய முடி கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

அண்டர் கட் (Undercut):

பக்கவாட்டு மற்றும் பின்புறம் உள்ள முடியை முழுமையாக நீக்கி, மேல் பகுதியை நீளமாக வைத்து ஸ்டைல் செய்யும் ஒரு நவீன ட்ரெண்ட் இது. தைரியமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தரும். முடிக்கு வண்ணம் கொடுப்பது அல்லது ஹேர் வேக்ஸ் பயன்படுத்துவது ஸ்டைலை மேலும் மேம்படுத்தும்.

க்ரூ கட் (Crew cut):

பராமரிக்க எளிதானது. பக்கவாட்டில் மிகக் குறுகிய முடியுடனும், தலையின் உச்சியில் சற்று நீண்ட முடியுடனும் காணப்படும் ஒரு கிளாசிக் மற்றும் நவீன சிகை அலங்காரமாகும். கோடை காலத்திற்கு பொருத்தமான ஸ்டைல் இது.

இதையும் படியுங்கள்:
பாய்ஸ் சம்மர் ஃபேஷன் 2026: இந்த 4 உடைகள் இருந்தால் நீங்கள்தான் டான்!
mens-hair-style

பாம்படோர் (Pompadour):

முன் பகுதியில் முடியை அதிகமாக உயர்த்தி, பின்னோக்கி சீவி, பக்கவாட்டில் குறைவாக வைத்திருக்கும் ஒரு உன்னதமான ஸ்டைலாகும். இது எல்விஸ் பிரெஸ்லி போன்றவர்களால் பிரபலப்படுத்தப்பட்டு இன்றும் டிரெண்டில் உள்ளது.

முக வடிவத்திற்கு ஏற்ற ஹேர்கட் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எந்த ஒரு ஸ்டைலையும் முயற்சிக்கும் முன்பு அது நம் முடி வகைக்கு ஏற்றதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com