மாதவிடாய் சுழற்சியும், சரும பாதிப்புகளும்! 

Skin Problem
Skin Problem
Published on

பெண்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மாதமும் நிகழும் மாதவிடாய் சுழற்சி, உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதில் சருமம் பாதிக்கப்படுவதும் ஒன்று. மாதவிடாய் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால், சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் தென்படுகின்றன. முகப்பரு, வறட்சி, எண்ணெய்த் தன்மை என பல பிரச்சினைகள் மாதவிடாய் காலத்தில் அதிகரிக்கலாம். 

மாதவிடாய் சுழற்சி என்பது கருப்பையில் முட்டை, உற்பத்தி மற்றும் கருத்தரிப்பதற்காக தயாராகும் ஒரு செயல்முறையாகும்.‌ இந்த செயல்முறையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் என்ற இரண்டு முக்கிய ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களின் அளவு சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபடும். இந்த மாற்றங்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பு, செல்களை புதுப்பித்தல் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை பாதிக்கின்றன. 

மாதவிடாய் சுழற்சி ஏற்படுத்தும் சருமப் பிரச்சனைகள்: 

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முகப்பருவை அதிகரிக்கச் செய்யும். மேலும், இச்சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதால், சருமம் அதிகமாக வறண்டு போகும். மேலும், புரோஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகரிக்கும்போது சருமத்தில் அதிகமாக எண்ணெய் சுரக்கத் தொடங்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறிவிடும். 

மாதவிடாய் சுழற்சியின்போது சருமத்தை பராமரிக்கும் வழிகள்: 

மாதவிடாய் சுழற்சியால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக, சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உண்ணுவது நல்லது. இத்துடன் அதிகமாக தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 
Skin Problem

உங்கள் சரும வகைக்கு ஏற்ற சரியான கிளென்சரைப் பயன்படுத்துவது நல்லது. இத்துடன் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாஸ்ச்சரைஸர் பயன்படுத்துங்கள். மாதவிடாய் சமயத்தில் சருமம் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என்பதால் சூரிய ஒளியால் எளிதில் பாதிக்கக்கூடும். எனவே, வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மனநிலையில் மாற்றங்கள் இருக்கும். இதனால் மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். எனவே, அவற்றைத் தவிர்ப்பதற்கான பொழுதுபோக்குகளை கடைப்பிடிப்பது நல்லது.‌

மாதவிடாய் சுழற்சி மற்றும் சரும பாதிப்புகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஹார்மோன் மாற்றங்கள் சருமத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், சரியான சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையைக் குறைக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com