சரும ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? 

Woman
Clear skin
Published on

நம்மில் பெரும்பாலானோர் சருமத்தில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை கவனித்திருப்போம். முகப்பருக்கள், கரும்புள்ளிகள் வறட்சி எண்ணெய் பசை போன்றவை சருமத்தில் ஏற்படும் சில பொதுவான பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்று நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள். இந்தப் பதிவில் ஹார்மோன்களுக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

ஹார்மோன்கள் என்பவை நம் உடலில் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள். அவை ரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உடலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம், இனப்பெருக்கம் போன்ற முக்கிய செயல்பாடுகளில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

சருமத்தின் மீதான ஹார்மோன்களின் தாக்கம்: 

நம் உடலில் சுரக்கும் பல்வேறு வகையான ஹார்மோன்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. 

  • ஆண்ட்ரோஜன்: ஆண்களில் அதிகமாக காணப்படும் இந்த ஹார்மோன், எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி சருமத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து, பருக்கள் உண்டாகக் காரணமாகிறது. 

  • ஈஸ்ட்ரோஜன்: இந்த ஹார்மோன் பெண்களில் அதிகமாக காணப்படும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. 

  • தைராய்டு ஹார்மோன்: உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் இந்த ஹார்மோன் சருமத்தின் வறட்சி, சொரி மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

  • கார்டிசோல்: மன அழுத்த ஹார்மோன் என்று அழைக்கப்படும் இந்த ஹார்மோன், நீண்ட காலமாக அதிக அளவில் சுரக்கும் போது சருமத்தை மெலிதாக்கி, முன்கூட்டியே வயதான தோற்றத்தைக் கொடுக்கும். 

ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் வழிமுறைகள்: 

ஹார்மோன்கள் சருமத்தில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் முழு தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
தினசரி உணவுடன் வெள்ளரி விதைகளை சேர்த்து உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Woman

தினசரி போதுமான அளவு தூங்குவது ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்க உதவும். மேலும் யோகா, தியானம் போன்ற மன அழுத்த நுட்பங்களைப் பயன்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மருத்துவரை அணுகி ஹார்மோன் சமநிலை குறித்து ஆலோசனை பெறுவது நல்லது. 

நமது ஆரோக்கியத்திற்கும் ஹார்மோன்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஹார்மோன் சமநிலை குறைபாடு பல்வேறு வகையான சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஹார்மோன் சமநிலையை பராமரித்தால் சருமத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com