
சருமத்திலுள்ள கருமையை போக்கி முகத்தை கலராக்கும் தன்மை பாலில் அதிகமாக இருக்கிறது. பாலை தினமும் சருமத்துக்கு பயன்படுத்தி வருகிறவர்களுக்கு சருமம் பளபளப்பாகவும், நல்ல கலராகவும் இருக்கும். இத்தகைய பாலை எப்படி எல்லாம் சருமத்துக்கு பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
காய்ச்சாத பச்சை பாலில் லாக்டிக் அமிலம் ,கால்சியம், வைட்டமின்கள் பி12 ,பி6, ஏ மற்றும் டி2 மற்றும் ப்ரோக்ராம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தை நெகிழ்வாக வைத்திருப்பதோடு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும். மாசு மருவற்ற பிரகாசமான சருமத்தை பெற முடியும்.
பால் + மஞ்சள் பேஸ் பேக்
காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்.
பயன்படுத்தும் முறை: ஒரு பவுலில் காய்ச்சாத பாலை எடுத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கி முகத்தை நன்றாக கழுவி விட்டு முகத்தில் தடவி 20 நிமிடம் உலர விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வர முகம் தங்கம் போல ஜொலிக்கும். இதனை இரவில் போட்டு காலையில் கழுவவும்.
பால் + பாதாம் பருப்பு
காய்ச்சாத பால் - 4 ஸ்பூன்
பாதாம் பருப்பு - 5.
பயன் படுத்தும் முறை: பாதாம் பருப்பை காய்ச்சாத பாலில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்ததும் அதன் தோலை உரித்துவிட்டு பாலுடன் சேர்த்து நன்கு அரைத்து பேஸ் பேக்காக அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பளபளப்பாவதுடன் சருமத்தில் உள்ள கருமை நீங்கி முகம் நல்ல நிறமாகும்.
பால் + கடலைமாவு + முல்தானி மட்டி
கடலை மாவு - ஒரு ஸ்பூன்
முல்தானி மெட்டி -ஒரு ஸ்பூன்
காய்ச்சாதபால் - நாலு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: பாலில் முல்தானி மட்டி, கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கலவையை முகத்தை கழுவிவிட்டு அப்ளை செய்து, இருபது நிமிடங்கள் வரை அப்படியே உலரவிட்டு பின் காய்ந்த பின் லேசாக குளிர்ந்த நீர் கொண்டு ஒற்றி எடுத்து வட்ட வடிவில் தேய்த்து, ஐந்தி நிமிடங்கள் மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் பிரகாசமாகவும், கலரும் பளபளப்பான சருமமும் தரும். இதனை வாரம் இருமுறை செய்யலாம்.