Mistakes not to do while applying makeup!
Mistakes not to do while applying makeup!

மேக்கப் போடும்போது செய்யக்கூடாத தவறுகள்! 

Published on

மேக்கப் என்பது ஒவ்வொருவரின் தனித்துவத்தையும், அழகையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும். இது நம்மை நம்பிக்கையுடன் காட்டவும், நம் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவும். ஆனால், சரியான முறையில் மேக்கப் போடாவிட்டால் அது நம்மை மோசமாக காட்டக்கூடும். மேக்கப் போடும்போது செய்யும் சில பொதுவான தவறுகள் நம் தோற்றத்தைக் கெடுத்து நம் தன்னம்பிக்கையை குறைத்துவிடும். இந்தப் பதிவில் மேக்கப் போடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

மேக்கப் போடும்போது செய்யக்கூடாத தவறுகள்:

நம் தோல் நிலத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். மிகவும் வெள்ளையாகவோ அல்லது மிகவும் கருப்பாகவோ இருக்கும் பவுண்டேஷன் நம் முகத்தை செயற்கையாக காட்டும். 

கன்னத்தில் அதிகமாக பிங்க் அல்லது ரோஸ் நிறம் பயன்படுத்துவது நம் முகத்தை கிளவுன் போல காட்டும். எனவே, இயற்கையான சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்து மிதமாகப் பயன்படுத்தவும். 

கண்களில் அதிகமாக ஷேடிங் செய்வது நம் கண்களை சிறிதாகவும், ஆழமாகவும் காட்டும். எனவே, இயற்கையான ஷேடிங்கை தேர்ந்தெடுத்து அதை மிதமாகப் பயன்படுத்துங்கள். 

ஐ லைனரை சரியாக போடாமல் போவது நம் கண்களின் அழகை மோசமாக்கிவிடும். எனவே, அகிலையினர் போடும்போது மெதுவாகவும் சீராகவும் வரையவும். 

கண் இமைக்கு மேலே ஷேட்ஸ் பயன்படுத்துவது நம் கண்களை சோர்வாகவும், வீங்கியதாகவும் காட்டும். எனவே, கண் இமைக்கு மேலே ஷேட்ஸ் லேசாக பயன்படுத்துங்கள். 

முகத்தில் அதிகமாக மேக்கப் போடுவது நம் முகத்தை செயற்கையாகவும், பிளாஸ்டிக் போலவும் காட்டும் என்பதால், முகப்பூச்சுகளை மிதமாகவே பயன்படுத்துங்கள். 

கன்னத்தில் பவுடரை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உதட்டில் அதிகமாக லிப்ஸ்டிக் பயன்படுத்துவது விரிசலை ஏற்படுத்தி மோசமான தோற்றத்தை வெளிப்படுத்தும். ப்ரைமர் பயன்படுத்தாமல் மேக்கப் போடுவது உங்கள் மேக்கப்பை நீண்ட நேரம் தங்க வைக்காது. 

இதையும் படியுங்கள்:
மேக்கப் இல்லாமலே அழகாகத் தெரிவதற்கான 7 தந்திரங்கள்!
Mistakes not to do while applying makeup!

இத்துடன் தவறான பிரஷ்களை பயன்படுத்துவது, மேக்கப்பை நீக்காமல் தூங்குவது போன்றவை உங்களது சருமா அழகை பாதித்து, உங்களை மோசமாக பிறருக்கு வெளிப்படுத்தும் என்பதை மறவாதீர்கள். 

மேற்கண்ட தவறுகளைத் தவிர்த்து சரியான முறையில் மேக்கப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். மேக்கப் போடுவதற்கு முன் நம் தோல்வகை, முகவடிவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே, ஒரு நல்ல மேக்கப் கலைஞரின் உதவியுடன், ஏதேனும் நிகழ்வுகளுக்கு சரியான முறையில் மேக்கப் போட்டு உங்களது இயற்கை அழகை வெளிப்படுத்துங்கள். 

logo
Kalki Online
kalkionline.com