மேக்கப் இல்லாமலே அழகாகத் தெரிவதற்கான 7 தந்திரங்கள்!

Tips to Look Beautiful Without Makeup
Tips to Look Beautiful Without Makeup

மேக்கப் என்பது ஒருவரது அழகை மெருகேற்றிக் காட்டும் ஒன்றாகும். குறிப்பாக பெண்கள் பல காலமாகவே இதை செய்து வருகின்றனர். ஆனால் மேக்கப் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களால் சில பாதிப்புகள் ஏற்படுவதால், இயற்கை அழகை உருவாக்கிக் கொள்ளவே இந்த கால பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். நீங்களும் அத்தகைய நபர்களில் ஒருவராக இருந்தால், மேக்கப் போடாமலேயே எப்படி அழகாக இருப்பது? என்பதற்கான தந்திரங்களை இப்பதிவின் வாயிலாகத் தெரிந்து கொள்ளுங்கள். 

  1. முறையான சரும பராமரிப்பு: நீங்கள் மேக்கப் போடாமலேயே அழகாக இருப்பதற்கு தினசரி உங்கள் சரும ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முடிந்தவரை உங்கள் சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும் பொருட்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் சருமத்தின் வகையை கண்டறிந்து, அவற்றிற்கு ஏற்ப பக்கவிளைவுகள் இல்லாத சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றினால், எப்போதும் பொலிவுடன் இருக்கலாம். 

  2. நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்துக்கள்: ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்தை பெறுவதற்கு ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நீரேற்றம் நச்சுக்களை வெளியேற்ற உதவி, சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும். மேலும் ஊட்டச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், உள்ளிருந்து உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்க இவை அனைத்தும் உதவும். இது இளமை மற்றும் பளபளக்கும் தோற்றத்தை உங்களுக்குக் கொடுக்கும். 

  3. ஆரோக்கியமான வாழ்க்கை முறை: மேக்கப் போடாமல் அழகாக இருப்பதற்கு உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது முக்கியம். முறையான உடற்பயிற்சி, போதுமான அளவு தூக்கம், உங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்வதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருப்பதால், அது உங்கள் முகத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கும். 

  4. இயற்கை அழகை மேம்படுத்துங்கள்: இயற்கையாகவே உங்கள் முகத்தில் சில விஷயங்கள் அழகாக இருக்கும். அதை மேலும் மெருகேற்றிக் காட்டுங்கள். குறிப்பாக பெண்கள் தங்களின் புருவத்தை அழகு படுத்தினால், அது பிறரை வெகுவாக ஈர்க்கும். அதேபோல கண் இமைகளை ஒழுங்குபடுத்துதல், இயற்கையான லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம் பயன்படுத்துவது, உங்களது அழகை மேலும் அதிகரிக்கும். 

  5. புன்னகை மற்றும் நம்பிக்கை: ஒரு உண்மையான போலி இல்லாத புன்னகை, நீங்கள் அணியக்கூடிய சிறந்த மேக்கப் ஆகும். அத்துடன் உங்கள் வாய் சுகாதாரத்திற்கு அக்கறை காட்டுங்கள். பற்களை தூய்மையாக வைத்திருங்கள். வெளியே செல்லும்போது எப்போதும் நல்ல தோரணையை பராமரிக்கவும், நம்பிக்கையுடன் நடக்கவும், உங்களது நேர்மையை வெளிப்படுத்தவும். இப்படி செய்தாலே நீங்கள் அனைவருக்கும் அழகாகத் தெரிவீர்கள். 

  6. முடி பராமரிப்பு: உங்களது ஒட்டுமொத்த தோற்றத்தையும் சிறப்பாக மாற்றுவது உங்களது முடி மட்டுமே. எனவே உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் முகத்திற்கு ஏற்ற சிகை அலங்காரத்தை தேர்வு செய்து பயன்படுத்தவும். நீங்களே பல அலங்காரங்கள் செய்துபார்த்து உங்கள் முகத்திற்கு எது ஒத்துவரும் என்பதை தேர்வு செய்யுங்கள். 

  7. நல்ல உடை: நல்ல உடைகளை தேர்ந்தெடுத்தாலே உங்களது ஒட்டுமொத்த தோற்றமும் சிறப்பாக மாறிவிடும். ஆடைகள் உங்கள் உடல் வடிவத்தை மெருகேற்றி, நம்பிக்கை உடையவராக வெளிப்படுத்தும். உங்கள் அழகை வெளிப்படுத்தும் சரியான நிற உடைகளை தேர்வு செய்யவும். இது உங்களது அழகை இயற்கையாக பிரதிபலிக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
Acidity பிரச்சனையா? இந்த 5 இயற்கை வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள்! 
Tips to Look Beautiful Without Makeup

மேலே குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றினால், நீங்கள் மேக்கப் போடாமலேயே பிறருக்கு அழகாகத் தெரிவீர்கள். என்றுமே இயற்கையான அழகை வெளிப்படுத்துபவர்களை மட்டுமே பிறருக்கு அதிகம் பிடிக்கும். எனவே எப்போதும் எதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com