அணிவதற்கு சுகமான மொடால் (Modal) ரக ஆடைகளின் தனித்துவம் என்ன?

The uniqueness of the clothes
modal dress material
Published on

நாம் அணியும் ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நமக்குப் பிடித்த மாதிரியும், பிறர் மனத்தைக் கவரும்படியும் இருப்பது முக்கியமல்ல. அவை அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். சில உடைகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அணிந்து கொள்ள வசதில்லாமல் இருந்தால் அத்தகைய உடைகளால் பயன் இல்லை. ஆனால் மொடால் ரக துணிகள் அணிவதற்கு மிகவும் சுகமாகவும், சவுகரியமாகவும் இருக்கும். அவற்றின் சில முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

 1. மொடால் துணிகள் பீச் மரங்களின் செல்லுலோஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை அணிந்து கொள்வதற்கு மிகவும் மென்மையானவை.  இது நாள் முழுவதும் அணிவதற்கு வசதியாக இருக்கும்.

2.  இது அணிபவரை எப்போதும் குளிர்ச்சியாகவும்,  சூடான காலநிலையில் கூட வியர்க்காத வண்ணம் வசதியாகவும் வைத்திருக்கும்.

3. அதிகமான வெயில் நேரத்தில் கூட மொடால் துணிகள் ஈரப்பதத்தை விரைவாக உறிஞ்சி வெளியிடும். எனவே அணிபவரை உலர்வாக வைத்திருக்கும். சிறிது கூட கசகசப்பின்றி இருக்கும்.

4. இது மென்மையாக இருந்தபோதிலும்,  நீடித்து உழைக்கும். இதன் கட்டமைப்பு சுருங்கிப் போவதில்லை. நிறமும் சீக்கிரத்தில் மங்காது.

5. இது முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பீச் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் மக்கும் தன்மை கொண்டது. மற்ற செயற்கை துணிகளைப் போல சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.

6. இது நெகிழ்வுத்தன்மை உடையது. அதனால், கிராண்டான  உடைகள் சாதாரண ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள் தயாரிக்க ஏற்றதாக அமைகிறது. 

இதையும் படியுங்கள்:
இடது பக்கம் மூக்கு குத்துவதன் அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!
The uniqueness of the clothes

7. இது தன் வண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதில் சிறந்து விளங்குகிறது. மொடால் துணிகள் சாயத்தை நன்றாக வைத்திருக்கின்றன. இதன் விளைவாக துடிப்பான வண்ணங்கள் மங்காமல் நீண்ட காலம் நீடிக்கும்.

8. இவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது. இது பொதுவாக இயந்திரத்தில்  துவைத்து உலர்த்தினாலும் சுருங்குவது சாயம் போதல், துணியின் தரம் குறைதல் போன்ற பிரச்னைகள் இல்லை.

9. ஒரு ஆடை இறுதி வடிவம் பெறும் போது ஒவ்வொரு பொருளின் நன்மைகளையும் மேம்படுத்த பருத்தி மற்றும் பாலியஸ்டர் போன்ற மற்ற இழைகளுடன் மொடால் பெரும்பாலும் கலக்கப்படுகிறது.

10. நவீன ஆடை வடிவமைப்பில் நிலைத்தன்மை மற்றும் வசதியான, நன்கு சீரமைக்கப்பட்ட, அன்றாட மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஆடைகளுக்கு மொடால் ரக துணிகள் ஒரு சிறந்த கவர்ச்சிகரமான தேர்வாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com