
அழகு என்பது ஆண்கள் பெண்கள் எல்லோருமே விரும்பக்கூடியது அதிலும் அழகில் சருமம்தான் முதலிடத்தில் உள்ளது இந்த சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மின்னிட நீங்கள் காலை வேளையில் இவைகளை செய்தாலே போதும் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.
அதற்கு தினமும் காலையில் உங்கள் சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது காலை தோல் பராமரிப்பு வழக்கம் என்று அழைக்கப்படுகிறது. தூசி, மாசுபாடு, வியர்வை, அதிக வெப்பம் அல்லது குளிர் ஆகியவை சருமத்தை பாதிக்கும் காரணங்களாகும். இதனால், சருமம் இயற்கையான பொலிவை இழக்கும். உங்கள் சருமத்தில் மீண்டும் பளபளப்பைக் கொண்டுவருவதற்கு பின்வரும் காலைப் பராமரிப்புப் பயிற்சிகள் பெரிதும் உதவும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கவும்:
ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியமாகும். இது வீக்கம் மற்றும் சுருக்கங்களை குறைத்து உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். எனவே காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, பளபளப்பான சருமத்தை வழங்குகிறது. இது தவிர, ரத்த ஓட்டம் சீராகி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை அளிக்கிறது. இது சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது.
ஆரோக்கியமான காலை உணவு:
ஆரோக்கியமான காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் காலை உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். காலை உணவு நமக்கு நாள் முழுவதும் வேலை செய்ய சக்தி அளிக்கிறது. எனவே, தினமும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஓட்ஸ், சியா புட்டிங், க்ரீன் டீ, ஸ்மூத்திஸ் மற்றும் புதிய பழங்கள் ஆகியவற்றை சாப்பிடவும்.
ஆயில் புல்லிங்:
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். ஆயில் புல்லிங் செய்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது, ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது. இது தவிர வீக்கத்தைக் குறைக்கிறது, உடல் சூடு தணிக்கிறது மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
காலை சரும பராமரிப்பு வழக்கம்:
சரும பராமரிப்பு முறையானது பருவங்கள் மற்றும் சரும வகையின் அடிப்படையில் மாறுபடுகிறது. சருமத்தை சுத்தம் செய்தல், மாய்ஸ்சரைசிங் மற்றும் டோனிங் போன்ற காலை சரும பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றவும். குறிப்பாக, குளிர்காலத்தில் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டாம்.
நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக இருக்கவும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்கவேண்டும். தூங்க செல்வதற்கு முன் மேக்கப்பை கண்டிப்பாக அகற்ற வேண்டும்.