இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மொராக்கோ லிப்ஸ்டிக்!

Natural Beauty tips
Moroccan lipstick
Published on

மொரோக்கன் லிப்ஸ்டிக் (Moroccan lipstick) என்பது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவகை உதட்டுச்சாயம். இது பெரும்பாலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக அகர் ஃபாசி (Aker Fassi) என்ற மொராக்கோ லிப்ஸ்டிக் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறங்களில் பரவலாக கிடைக்கும் உதட்டு சாயமாகும்.

இது உலர்ந்த பாப்பி (poppy) பூக்கள் மற்றும் சில தாதுக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நிறமி உதடுகளுக்கு இயற்கையான மற்றும் நீண்ட நேரம் நிலைக்கும் அழகிய வண்ணத்தை அளிக்கிறது. அத்துடன் ஈரப்பதம் அளிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இது 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் குறிப்பாக பாப்பி பூக்களிலிருந்து தயாரிக்கப்பட்டு உதட்டுச் சாயம் (lipstick), உதடு கறை (lip stain) மற்றும் கன்னப் பூச்சாக (cheek tint) பயன்படுத்தப்படுகிறது. இதில் அர்கன் எண்ணெய் போன்ற பொருட்கள் இருப்பதால் உதடுகளை ஈரப்பதமாக்கி மென்மையாக்குகிறது.

உலர்ந்த பாப்பி இதழ்கள் மற்றும் மாதுளைத்தோலில் இருந்து தயாரிக்கப்படும் இது சருமத்தை ஈரப்பதத் துடனும், மென்மையாகவும், நச்சு எதிர்ப்புப் பண்புகள் கொண்டு இயற்கையாக தயாரிக்கப்படுகிறது. அகர் ஃபாசி மொராக்கோ லிப்ஸ்டிக் நிறமி நீண்ட நேரம் உதடுகளில் இருந்து இயற்கையான நிறத்தை அளிக்கிறது. இது மொரோக்கன் பெண்களின் பாரம்பரிய அழகு வழக்கத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
பருக்களின் பன்முகங்கள்: எந்தப் பருவுக்கு என்ன சிகிச்சை?
Natural Beauty tips

சிறிதளவு அகர் ஃபாசித்தூளை எடுத்து ஒரு சொட்டு தண்ணீர் அல்லது எண்ணெயில் சிறிது நனைத்துக் கொண்டு கன்னங்களில் தடவ இயற்கையான பளபளப்பை பெறலாம். அதேபோல் மென்மையான பூச்சாக உதடுகளிலும் தடவ பளபளப்பான பிரகாசமான நிறத்தைப் பெறலாம். இவை பாரம்பரிய அழகு பொருட்கள் விற்கும் கடைகளிலும், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் எளிதாக கிடைக்கிறது.

இது மொராக்கோ பாரம்பரிய அழகு சாதன பொருளாகும். ஒரு களிமண் பாத்திரத்தில் (terracotta pot) அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இது 100% இயற்கை மற்றும் கரிம பொருட்களைக் கொண்டுள்ளது.

இதன் சிவப்பு நிறம் 'ரட்டியா' (rhatia) அல்லது ரெட் கோஹல் (red Kohl) எனப்படும் தாவரப் பொருளிலிருந்து பெறப்படுகிறது. இது உதடுகளுக்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது. இது முற்றிலும் இயற்கையான தாவரங்கள் மற்றும் கனிமங்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் ஒரு சைவ மற்றும் ஆர்கானிக் அழகு சாதனப் பொருளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com