பருக்களின் பன்முகங்கள்: எந்தப் பருவுக்கு என்ன சிகிச்சை?

Beauty tips
The many facets of pimples
Published on
mangayar malar strip

தின்பருவத்தினர் அனைவருமே துடைத்து வைத்த கிளீன் ஸ்லேட் போன்ற முகம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனாலும் பருவ வயதில் பருக்கள் முகத்தில் தோன்றி அழகைக் கெடுத்து தொல்லை தருகின்றனவே? இவற்றை போக்க வழியே இல்லையா? என்று ஏங்குபவர்கள் ஏராளம்.

பருக்கள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

மது தோலின் அமைப்பு மேல்தோல், நடுத்தோல் மற்றும் ஹைப்போ டெர்மிஸ் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது. மேல்தோல் என்பது தோலின் வெளிப்புற அடுக்கு ஆகும், நடுத்தோலில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’ (Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன.

பதின்பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது. வெளியில் செல்லும்போது தூசு, அழுக்கு சேர்ந்து, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கி பருக்களாக பரிணமித்து முகத்தில் தோன்றுகின்றன.

எந்த வயதில் பருக்கள் தோன்றுகின்றன?

பெண் குழந்தைகள் உயரமாக வளரும் போதும், குறிப்பாக பூப்பெய்தும் பருவத்தில் 8 முதல் 13 வயதிற்குள், ஆண் குழந்தைகளுக்கு 13 லிருந்து 20 வயதுக்குள் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. முகத்தில் மட்டுமல்லாது, நெற்றி, தோள்பட்டை, மார்பு, நெஞ்சு, முதுகுப்பகுதியிலும் பருக்கள் தோன்றும்.

பருக்களின் வகைகள்

1. பதின்பருவ பருக்கள் (Teenage Acne)

டீனேஜ் பருவத்தில் நெற்றியில் இருந்து ஆரம்பித்து மூக்கிலும், தாடையிலும் டி (T) வடிவத்தில் பருக்கள் தோன்றும். பின்னர் கன்னம், நெஞ்சின் மேற்பகுதி, தோள்பட்டை, புஜத்தின் வெளிப்புறம், முதுகுப்புறம் போன்ற பகுதிகளில் பருக்கள் தோன்றும், வெயிலில் விளையாடி முகம் tan ஆகி கருக்கும்போது  இவை தானாக மறைந்து விடும்.

2. ஹார்மோனல் பருக்கள் ( Harmonal  Acne)

து பெண்களுக்கென்று பிரத்தியேகமாக தாடையிலும் கழுத்திலும் தோன்றும். மாதவிடாய் காலத்திற்கு 10 நாட்கள் முன்பு தோன்றி மாதவிடாய் வந்ததும் மறைந்து விடும். இது பிரீ மென்சுரல்  சிம்டம்ஸ் போல வந்து மறையும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை அழகை மேம்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!
Beauty tips

3.  ஒப்பனை பருக்கள் (Cosmetic Acne)

பொதுவாக பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, முகத்தில் காலையில் பூசிய லோஷன், க்ரீமை மாலையில்  சாவகாசமாக கழுவுவதுதான். மூன்று மணி நேரத்திற்கு மேல் முகத்தில் தங்கும் எந்த வகைக் க்ரீம் என்றாலும் எண்ணெய் சுரப்பிகளின் துவாரத்தை அடைத்து பருக்கள் தோன்ற வழிவகை செய்யும். இரவு தூங்கப் போகும் முன் முகத்தை சோப்பு போட்டுக் கழுவி விட்டே உறங்கச் செல்ல வேண்டும். ஒப்பனை பருக்கள் பெரும்பாலும் காதுக்கு முன்புறமுள்ள பகுதியிலும் கன்னத்தில் மட்டுமே தோன்றும்.

வெயில் காலத்தில் சூடு என்று சந்தனம், சோற்றுக் கற்றாழை, தேங்காய் எண்ணெய், நாமக்கட்டியை குழைத்துப் பூசுவது போன்ற செயல்கள்  எண்ணெய் சுரப்பிகளின் துவாரத்தை அடைத்து காஸ்மெட்டிக் பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

4. ஜிம் பருக்கள் (Gym Acne)

ண்களுக்கென்று  பிரத்யேகமாக  தோன்றுவதும் ஜிம் பருக்கள். கட்டுமஸ்தான உடல் வேண்டி ஜிம் செல்பவர்கள் அங்கு ஹெவி புரோட்டீன் மற்றும் அனபாலிக் ஸ்டீராய்டு கலந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாங்கி குடிப்பதால் இந்த வகை பருக்கள் தோன்றும் இது தோள்பட்டை, புஜத்தின் மேல் பகுதி மற்றும் நெஞ்சு பகுதியில் வரும்.

Beauty tips
Cosmetic Acne

5.  இனிப்பு பருக்கள் (Sugar Acne)

து சாக்லேட், பால்கோவா, டால்டா சேர்த்த இனிப்பு வகைகள், பாமாயிலில் பொரித்த உணவு வகைகள், பிஸ்கட், வர்க்கி, ரஸ்கி போன்ற மைதா கலந்த நொறுக்குத் தீனிகள், பிரட், சமோசா, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி வகைகளை உண்பதால் வரும். மேற்கண்ட உணவுகளை உண்பதால் நமது தோலில் எண்ணெய் சுரப்பிகள் கெட்டியான மெழுகு போன்ற எண்ணையை சுரக்கச் செய்யும். அதனால் பருக்கள் தோன்றுகின்றன மேற்கண்ட உணவு வகைகளை அறவே தவிர்த்து ஜாகிங், ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்வது இதற்கு தீர்வாகும்.

6. மருந்துப் பருக்கள் (Drug Acne)

செயற்கை கருத்தரிப்புக்கான ஐ.வி.எப் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது மருந்துப் பருக்கள் தோன்றும். மேலும் இந்த வகைப் பருக்கள் ஸ்டிராய்டு மாத்திரைகள் உட்கொள்வதாலும், சில ஐ என். ஹெச் (I.N.H) என்ற காச நோய்க்கான மாத்திரை,  பெனிட்டாயின் என்ற வலிப்பு நோய்க்கான மாத்திரை, லித்தியம் போன்ற மனநல மருந்துகள் உட்கொள்ளும் போதும் வரலாம். இந்த வகையான மருந்துகளை நிறுத்திய உடன் பருக்கள் மறைந்து விடும்.

7. சிவப்புப் பருக்கள் (Fair Acne) 

திருமணப் பருவத்தில் உள்ள ஆணும் பெண்ணும் முகம் சிவப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் ஸ்டிராய்டு கலந்த கிரீம்களை, குறைந்த விலையில் கிடைக்கிறது என மெடிக்கலில் வாங்கி தடவும் மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றை தடவுவதால் மேல் தோல் மெல்லியதாகி பருக்கள் தோன்றும். நடுத் தோலில் உள்ள ரத்தக்குழாய்கள் வெளியே தெரிவதால் அந்த இடம் சிவப்பாக தோன்றமளிக்கும். நமது நிறம் சிவப்பாக மாறிவிட்டது என மீண்டும் மீண்டும் அறியாமையினால் சிவப்பழகுக் க்ரீம்களை வாங்கித் தடவி அவதிப் படுகிறார்கள். வழக்கமான வெயில், பனி, தூசு என எதையும் இந்த மெல்லிய தோல் தாங்காது. தோலின் எதிர்ப்புச்சக்தி குறைந்து போகும்.

பருக்கள் வராமல் தடுக்கவும், சிகிச்சை முறையும்:

வெயிலில் விளையாடி முகம் கருப்பானால் பருக்கள் தானாக மறைந்துவிடும். 20 வயதுக்கு மேல் பெரும்பாலும் பருக்கள் தொந்தரவு தருவதில்லை. மாலையிலும், இரவிலும் முகத்தை மென்மையான சோப்புப் போட்டு கழுவி சுத்தமாக வைக்கவேண்டும். விட்டமின் ஏ மாத்திரைகளை தோல் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடுத்த கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சரும வறட்சியைப் போக்க... ஆயுர்வேதமும் இயற்கைப் பழங்களும்!
Beauty tips

விட்டமின் ஏ கிரீம்களை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பரு இருக்கும் ஏரியாக்களில் 10 நிமிடங்கள் மட்டும் தடவி பின்பு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய்க் கோளாறு உள்ளவர்கள், சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், பிஎம்ஐ 30க்கு மேல் உள்ள உடற்பருமன் உள்ளவர்களுக்கு தனித்தனியே சிகிச்சை தரப்பட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com