பாலிவுட் நடிகை மௌனி ராய் தனது அழகை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
நாகினி சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் மௌனி ராய். முதல் சீசனிலேயே தனக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தைப் பிடித்துக் கொண்டவர். பின் இரண்டாவது சீசனிலும் நடித்தார். மற்ற சீசன்களில் அவ்வப்போது கேமியோ ரோல் செய்து வந்தார். நாகினி சீரியல் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.
அந்தவகையில் பிரம்மாஸ்திரா படத்தின்மூலம் இந்தியா முழுவதும் இவர் சினிமாவில் அறிமுகமான விஷயம் தெரிய வந்தது. அவருக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அந்தவகையில் அவரின் அழகின் ரகசியம் குறித்துப் பார்ப்போம்.
நீர் அருந்துதல்:
பொதுவாக உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதையே அனைத்து நடிகைகளும் பின்பற்றுவார்கள். அதேபோல்தான் மௌனி ராயும் தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் சருமம் பளபளப்பாக மாறும்.
மாய்ஸ்ரைஸர்:
படப்பிடிப்பின்போது கட்டாயம் மேக்கப் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோல கட்டாயம் மேக்கப் போட வேண்டும் என்ற சூழலில், அந்த வேலை முடிந்தவுடன் க்ளென்ஸர் வைத்து மேக்கப்பை ரிமூவ் செய்து, கட்டாயம் மாய்ஸ்ரைஸர் பயன்படுத்த வேண்டும்.
சன்ஸ்கிரீன் மற்றும் லிப் பாம்:
வெளியே செல்லும் நேரங்களில் கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகிறார். மேலும் உதட்டை காயாமல் பாதுகாக்க லிப் பாமை பயன்படுத்துகிறார்.
மசாஜ்:
வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மௌனி முகத்திற்கு மசாஜ் செய்கிறார். இதனால், முகச் சருமத்தில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
பேசிக் மேக்கப்:
படபிடிப்பு இல்லாத சமயங்களில் முகத்திற்கு அதிக மேக்கப் போடாமல், காஜல், லிப் பாம், மாய்ஸ்ரைஸர் போன்ற பேசிக் மேக்கப்களைப் பயன்படுத்துகிறார்.
கற்றாழை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:
என்னத்தான் பார்லர் சென்றாலும், இவர் வீட்டிலும் சில டிப்ஸ் பின்பற்றுகிறார். கற்றாழையை முகத்தில் தடவுகிறார். அதேபோல் பால் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்கைப் போடுகிறார். இது சருமத்தை மென்மையாக்குகிறது. இதுபோல நாமும் அன்றாடம் நமது சருமத்தை கவனித்து வந்தால், பளபளப்பாகவும் மென்மையாகவும் தோற்றமளிக்கும் .