
கடலைமாவு சருமத்திற்கும் சிறந்தது. இறந்த செல்களை நீக்கி இயற்கையான எக்ஸ்ஃபோலியேட் செய்வதில் மிகச்சிறந்தது. இதை அடிக்கடி பயன்படுத்துவதால் நல்ல பொலிவான பளபளப்பான முகம் கிடைக்கிறது.
உங்கள் முகம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால் அதை நீக்குவதுடன் பருக்கள் வராமல் தடுக்கிறது. இது முகத்தில் ஊடுருவி ப்ளாக் ஹெட் மற்றும் ஒயிட் ஹெட்டை நீக்கி முகத்தை நன்கு மிளிரச்செய்கிறது.
இது முகத்தில் புள்ளிகள் மற்றும் கருமையைப்போக்கி இயற்கை ப்ளீசிங்காகத் திகழ்கிறது. இதில் துத்தநாகம் மற்றும் சி சத்து உள்ளதால் கொலாஜனை அதிகரித்து சருமத்தை நெகிழ்வான வைக்கிறது. முகக்கோடுகள் சுருக்கங்களை தடுக்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு பண்பால் பருக்கள் மற்றும் அரிப்பை போக்குகிறது. சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சிலிருந்து பாது காக்கிறது.
சருமத்தின் பிஹெச் அளவை சமன்படுத்தி முகத்தைப் பொலிவாக்கும். இதைக்கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய நல்ல இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. முகத்தை நீரேற்றமாக வைப்பதுடன் முகத்தில் முடி வளர்ச்சியைத் தடுக்கிறது.
கடலைமாவு யோக்ஹர்ட் பேக்
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவில் ஒரு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துத்கழுவவும். இது முகத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.
மஞ்சள் மற்றும் கடலைமாவு பேக்
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ முகம் மாசு மருவின்றி ஜொலிக்கும்
கடலைமாவு தேன் பேக்
இரண்டுடேபிள்ஸ்பூன் கடலைமாவு, ஒரு டீஸ்பூன் தேன் சிறிது பால் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ முகம் மிக நீரேற்றமாக இருக்கும்.
ஆலோவேரா கடலைமாவு பேக்
இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்துக்கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துத்கழுவ முகத்தில் அரிப்பை நீக்கி பொலிவாக்கும்.
கடலைமாவு மற்றும் ஓட்மீல் ஸ்க்ரப்
இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஓட்ஸ் கலந்து சிறிது பால்விட்டு பேஸ்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துத் கழுவ முகத்தின் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும்
மேற்கூறியபேஸ் பேக்குகள் காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக்குங்கள். விரல்களை நனைத்து வட்டவடிவில் மசாஜ் செய்து பேக்கை நீக்கவும்.
இயற்கை முறையில் எந்த பக்கவிளைவுகளும் இன்றி மேற்கூறிய வற்றையும் பயன்படுத்தலாம்.