கண்களுக்கு ஆரோக்கியமும் அழகும் தரும் எளிய குறிப்புகள்!

Simple tips for healthy and beautiful eyes!
eye care tips
Published on

பெண்களின் அழகு கவர்ச்சியான கண்ணில்தான் இருப்பதாக பல கவிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்களை நாம் பாதுகாக்க வேண்டாமா? கண்களை கவர்ச்சியாக இருக்க பராமரிக்க சில யோசனைகள் இப்பதிவில்.

வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மேல் பகுதியில் சுற்றிலும் வையுங்கள். சிறிது நேரம் கழித்ததும் நீக்கிவிடவும்.

குளிர்ந்த வெள்ளரிக்காய்சாறு, ஐஸ் தண்ணீர், குளிர்ந்த டீ (பால், சர்க்கரை சேர்க்காதது) ஆகியவற்றை கலந்து கலவையாக்கி அதில் பஞ்சை முக்கி கண்களில் வையுங்கள். தினமும் இதனை 10 நிமிடம் பயன்படுத்தினால் கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கும். கண்களுக்கு நல்ல வசீகரம் கிடைக்கும்.

ரொட்டித்துண்டுகளை பாலில் ஊறவையுங்கள். அதில் 2 துளி பாதாம் எண்ணை சேருங்கள். அதனை பலமான துணியில் வைத்து லேசாக சூடாக்கி கண்களை மூடிக்கொண்டு அதன் மேல் வையுங்கள். இளம் சூடான உப்பு நீரில் முக்கி பஞ்சை சூடு தீரும்வரை கண்ககளைச் சுற்றி வைப்பதும் நல்லது.

வெயிலுக்கு மட்டும் கூலிங் கிளாஸ் பயன்படுத்தினால் போதும். எல்லா நேரத்திலும் அதனை அணியக்கூடாது.

கேரட், சோயாபீன்ஸ், பால், முட்டை, பாலாடைக்கட்டி, மீன், மாமிச உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கண்களுக்கு அதிக ஆரோக்கியமும் அழகும் கிடைக்கும்.

அதிக நேரம் தூக்கமில்லாமல் இருந்தால் கண் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சமையல் அறை, அதிக தூசி நிறைந்த இடங்களில் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.

இதையும் படியுங்கள்:
இப்படி செஞ்சு பாருங்க நீங்களும் அழகி ஆகலாம்..!
Simple tips for healthy and beautiful eyes!

பொதுவாக கோடைக்காலத்தில் அதிக உஷ்ணத்தின் காரணமாக சிலருக்கு கண்கள் சிவந்து காணப்படும். மேலும், தூசு விழும்போது கண்களை அதிகமாக கசக்குபவர்களுக்கு கண் சிவப்பாகி தண்ணீர் கொட்டும். இவ்வாறு செய்வது கண்ணுக்கு கெடுதலாகும். எனவே கோடைக்காலத்தில் கண்களை அதிகக்கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

வெளியில் சென்று வரும் பெண்கள் வீட்டிற்கு வந்த உடன் கண்ணையும், முகத்தையும் சுத்தமான நீரினால் நன்கு கழுவ வேண்டும். அப்போதுதான் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

கண்ட கண்ட ஷாம்பை உபயோகிப்பதால் கூட கண்ணின் தன்மை கெட்டுவிடும்.

சிலருக்கு காலையில் கண் இயற்கை நிறத்திலும், மாலையில் சிவப்பாகவும் இருக்கும். அடிக்கடி மேக் அப் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு சில தருணத்தில் காலையில் எழும்போதே கண் சிவந்து காணப்படும்.

சிலர் அதிக நேரம் டி.வி. பார்த்தாலோ, புத்தகம் வாசித்தாலோ கண்களுக்கு கெடுதல் ஏற்படும். அதே நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத சூழ்நிலையில் புத்தகம் வாசித்தால் கண்களுக்கு சோர்வு ஏற்பட்டு பார்வை குறைவு ஏற்படும். கண்ணில் வெளிச்சம் படும்படி வாசிக்கக் கூடாது. புத்தகத்தில் வெளிச்சம்படும்படி இருக்க வேண்டும். பயணம் செய்யும்போது படிக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
பெண்களின் வயிறு எடுத்துரைக்கும் லட்சணக் குறிப்புகள்!
Simple tips for healthy and beautiful eyes!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் கண் நோய்கள் ஏற்படும். இதனால் கண்ணின் வெண்பகுதி சிவப்பு நிறமாகி விடும். பிறகு கண்ணிலிருந்து சீழும் அடிக்கடி வெளிவரும். கண் நோய் ஒரு தொற்றுநோய். இது மற்றவர்களையும் எளிதில் பாதிக்கும். ஆதலால் கண் நோய் உள்ளவர்கள் ஆரோக்கியமாய் இருப்பவர் களின் பொருட்கள், டவல்கள் போன்ற வற்றைப் பயன் படுத்தக்கூடாது. குறிப்பாக பெண்களுக்கு கண்நோய் இருக்கும்போது அடுத்தவருடைய அழகுப்பொருட்களை எடுத்து அலங்காரம் செய்யக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com