
குளிர்காலம் வந்தாலே நம் சருமத்தில் வறட்சி, வெள்ளை திட்டுகள், உதடு வெடிப்பு என பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல விலையுயர்ந்த கிரீம்கள், லோஷன்கள் என நாம் பயன்படுத்தினாலும், இயற்கையான தீர்வுகளுக்கு இணையான பலன் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட இயற்கையின் அற்புதப் பரிசுகளில் ஒன்றுதான் கடுகு எண்ணெய்.
கடுகு எண்ணெயின் சிறப்புகள்?
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E போன்ற சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, வறட்சியை போக்கி, புத்துணர்ச்சியைத் தருகின்றன. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை Free Radical-களின் தாக்குதலிலிருந்து பாதுகாத்து, சரும சேதத்தை.
கடுகு எண்ணெயின் சரும நன்மைகள்:
கடுகு எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, ஈரப்பதத்தை வெளியேற விடாமல் தடுக்கின்றன. இதனால், சருமம் மென்மையாகவும், இளமையாகவும் இருக்கும்.
குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியால் சருமத்தில் வெள்ளை திட்டுகள் தோன்றும். கடுகு எண்ணெய் சருமத்தை ஆழமாக ஊடுருவி, இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக உதவுகிறது. இதனால், வெள்ளை திட்டுகள் மறைந்து, சருமம் ஒரே சீராக இருக்கும்.
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு வெடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு கடுகு எண்ணெய் தடவினால் உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வெடிப்பைத் தடுக்கிறது.
கடுகு எண்ணெய் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கிறது. மேலும், பொடுகுப் பிரச்சனையையும் குறைக்கிறது.
இதை தலைமுடியில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் சரும தொற்றுகளைத் தடுக்கின்றன.
கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது?
குளிப்பதற்கு முன், சருமத்தில் கடுகு எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன், தலைமுடியில் கடுகு எண்ணெயை தடவி மசாஜ் செய்யவும். பின்பு, ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலைமுடியை நன்றாக சுத்தம் செய்யவும். குளித்த பிறகு, குதிகாலில் கடுகு எண்ணெயை தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அதேபோல, உறங்கும் முன் உதடுகளில் கடுகு எண்ணெயைத் தடவி, மெதுவாக மசாஜ் செய்வது நல்லது.