நகங்களை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகள்!

nail maintanace tips
nail care tips
Published on

ரமான நகப்பூச்சுக்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போதுதான் நகத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது. சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே விரல்களை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வெட்டலாம்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போனால், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை ஊறவைத்து பின்னர் கழுவினால் நகங்கள் உறுதியாகும். நகப்பூச்சுயுடன் சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தினமும் நகப்பூச்சு உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்பட்டால் நகப்பூச்சுக்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஈரமாக இருக்கும்போது நகங்களை ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரத்தன்மையின்றி இருக்கும்போது ஷேப் செய்யவேண்டும். அப்போதுதான் நகங்கள் வலுப்பெறும்.

உங்கள் கைகளை அடிக்கடி கழுவினால், நகங்களில் கிருமிகள் சேர வாய்ப்பில்லை.

கிளிசரின் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அக்குளில் கருமை நீங்க இயற்கை வழிமுறைகள்!
nail maintanace tips

அதேபோல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாததிற்கு ஒருமுறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

நகங்களை கவனமாக பராமரிப்பது உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நகங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் தடுக்கிறது.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com