
உருளைக்கிழங்கு துண்டை எடுத்து கருமையாக இருக்கும் இடத்தில் தடவ கருமை நீங்கும். அல்லது உருளைக் கிழங்கை காரட் துருவியில் சீவி அதன் சாற்றைத்தடவி பத்து நிமிடம் கழித்து கழுவவும்.
ஒரு டீஸ்பூன் யோக்ஹர்ட் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது எலுமிச்சை ஜுஸ் சேர்த்து கருமையான அக்குளில் தடவி 10 நிமிடம் கழித்துத் சுத்தம் செய்ய கருமை நீங்கி பளிச்சென்று ஆகும்.
இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டியுடன் சிறிது எலுமிச்சை ஜுஸ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து இக்கலவையைத் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ கருமை நீங்கும்.
காபி மற்றும் க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் உள்ளன. இவை இரண்டையும் சிறிது நீர்விட்டு அப்பகுதியில் தடவ இறந்த செல்கள் நீங்கி பளிச்சென்று ஆகும்.
ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் யோக்ஹர்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து இதைத் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ கருமை நீங்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் உடன் சிறிது ப்ரௌன் சுகர் கலந்து அக்குளில் தடவி இது இறந்த திசுக்களை நீக்கி கருணையைப் போக்கும்.
ஆலோவேரா ஜெல்லை ஃப்ரிட்ஜ் ஜில் வைத்த பிறகு அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ கருமை முழுமையாக நீங்கும்.
ஆப்பிள் சிடார் வினீகருடன் சிறிது அரிசிமாவு சேர்த்துக் கலந்து அக்குளில் தடவிக்கழுவ கருமை நீங்குவதுடன் நல்ல நாசமாக்கும் இருக்கும்.
இதையும் தெரிஞ்சுக்கோங்க…
முடியை பளபளக்கச் செய்யும் இயற்கை ஜெல்கள்
சியாவிதை ஜெல்
சியா விதைகளை முதல் நாள் இரவு ஊறவிடவும். மறுநாள் இதை அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி எடுக்கவும் இதில் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் வெண்ணிலா, லாவண்டர் அல்லது ஆல்மண்ட் ஆயில் சேர்த்து இதை தலைமுடியில் மசாஜ் செய்து அலச ஆரோக்கியமான பளபளப்பான முடிவைப் பெறுவது உறுதி.
ஆளிவிதை ஜெல்
முதல் நாள் இரவே ஆளிவிதையை ஊறவைக்கவும். மறுநாள் இதை தண்ணீரில் 30 நிமிடம் கொதிக்கவிடவும். ஜெல் போன்று ஆகும். இதை வடிகட்டி எடுத்து வைத்து தலைக்கு உபயோகித்து அலச இது உங்களாமுடியை ஈரப்பதத்துடன் வைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முடிக்கு பொலிவைத்தரும்.
ஆலோவேரா ஜெல்
ஆலோவேரா ஜெல் எடுத்து அதனுடன் ஷியா வெண்ணையை சேர்த்து நன்கு கலந்து மிருதுவான பின் கலவையாக்கி முடியில் மசாஜ் செய்து அலச முடி ஈரத்தன்மையுடன் பளபளப்பாகும்.