

முகப்பருக்கள் ஹார்மோன் சமநிலை குறைவு, எண்ணெய் பசை, மருந்துகள், சோர்வு போன்ற காரணங்களால் உருவாகலாம். இயற்கை முறைகள் பயன்படுத்தும் முன் சருமத்தில் சோதனை செய்ய வேண்டும். ஐஸ் கட்டி, வெதுவெதுப்பான துவை, டீ ட்ரீ ஆயில், ஆலோவேரா, க்ரீன் டீ, தேன் போன்றவை அழற்சியை குறைத்து பருக்களை கட்டுப்படுத்த உதவும். முகத்தை மெதுவாக கழுவி, மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம்.
முகப்பருக்களை நீக்க இயற்கை வழிகளே நல்லது. இயற்கை வழிகளை பின்பற்றி வந்தாலும் சில சமயங்களில் பருக்கள் மோசமாகும் உண்டு. இதற்குப் பல காரணங்கள் இருப்பதால் உறுதியாக சிலவற்றைக் குறிப்பிடுதல் சிரமம். ஹார்மோன் சமச்சீரின்மையாலும் எண்ணைப் பசை அதிகமாக இருந்தாலும் பருக்கள் உருவாகலாம்.
இதை நன்கு ஆராய்ந்து பரு வருவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து பொருட்களை பயன்படுத்த வேண்டும். இறந்த திசுக்களில் இருக்கும் பாக்டிரியாவால் பரு உருவாகுகிறது. இது குடும்ப ஜீனை பொறுத்தும் உள்ளது. முகத்துளை அடைக்கப்பட்டு உண்டாகலாம்.
சில மருந்துகளால் உண்டாகலாம். சோர்வினாலும் பரு உண்டாகலாம். நீங்கள் இயற்கை முறைகளை பயன்படுத்துவதற்கு முன் சருமத்தில் சோதனை செய்துவிட்டுப் பயன்படுத்தவும்.
வழிமுறைகள்
1. ஐஸ் கட்டியை ஒரு மிருதுவான துணியில் சுற்றி பெருவின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ்கட்டியை நேரடியாக வைக்க வேண்டாம். இது அரிப்பை உண்டாக்கும்.
2.ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதை பெருவின் மீது பத்து நிமிடங்கள் வைக்கவும். இதைச் செய்தபிறகு பருவைத் தொடவேண்டாம்.
3. டீ ட்ரீ ஆயிலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சரும க்ரீமில் 5 சதவீதம் டீட்ரீ ஆயில் இருக்கும். சருமம் பொருளை பயன்படுத்துங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்யலாம். ஒரு துளி டீட்ரீ ஆயிலுடன் 19 சொட்டு ஜோஜோபா ஆயில் சேர்த்து அதை பெருவின் மீது தடவவும். டீ ட்ரீ ஆயிலை நேரடியாகப் பயன்படுத்தினால் எரிச்சல் வீக்கம் பிரச்னைகள் ஏற்படும்.
4. ஆலோவேரா ஜெல் அரிப்பை நீக்கி நீரேற்றமாக வைக்கும். இது கருவைச் சுற்றியுள்ள வெப்பத்தையும் தடிப்பையும் குறைக்கும். எந்தவித வாசனை இல்லாத நல்ல ஆலோவேரா ஜெல்லை தடவுவது நல்லது.
5. க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. இது எண்ணைப்பசையையும் குறைத்து அழற்சியையும் குறைக்கும் க்ரீன் டீயை பால், சீனி இல்லாமல் தயாரித்து நன்கு ஆறியதும் ஒரு துணியில் நனைத்து பரு மீது வைக்கவும். பத்து நிமிடங்கள் வைக்கலாம்.
6. தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உள்ளது. ஒரு துளி தேன் எடுத்து பரு மீது வைத்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
7. முகத்தை நன்கு இரண்டு முறை கழுவுவது நல்லது. வெதுவெதுப்பான நீர் சிறந்தது. முரட்டுத் துணியால் அழுத்தத் துடைக்கும் கூடாது.
8. மாயிஸ்டரைசரை தவிர்ப்பதால் சருமம் வறண்டே அரிப்பை உண்டாக்கும். மேலும் எண்ணைப் பசை அதிகமாகி முகத்துளைகளை அடைத்துவிடும். எனவே வாசனை இல்லாத மாய்ட்சரைசரை பயன்படுத்துங்கள்.
9. அல்ட்ரா வயலெட் கதிர் ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்கவும் முகம் சூரிய ஒளியில் கருத்து கருமையை உண்டாக்கிவிடும். எனவே இதைத் தடுக்க SPF 30 சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவது சிறந்தது.
10. பருக்களைத் தவிர்ப்பதற்காக என்று தனி டயட் எதுவும் கிடையாது. இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் கார்போஹைட்ரேட் மற்றும் அதிக க்ளைசுமிக் உணவுகள் பருக்களை அதிகரிக்கச் சேர்வதால் கூறுகிறார்கள். பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் உண்ணவும். இனிப்புகள். சர்க்கரை நிறைந்த பானங்கள், வெள்ளை ப்ரெட் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
11 அதீத சோர்வு உங்கள் ஹார்மோன்களை பாதிப்பதால் பரு உருவாக காரணமாகலாம். நல்ல தூக்கம் நல்ல உடற்பயிற்சி, டிஜிடல் பயன்பாடு குறைத்தல் போன்றவைகளில் கனம் வைக்கவும். கையை பருவின் அருகே கொண்டு செல்லக் கூடாது. சிலர் பருவை கிள்ளிவிடுவதால் அழற்சி ஏற்பட்டு தழும்புகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.
12. ஆப்பிள் சிடார் வினீகர் இதில் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு உள்ளதால் தண்ணீர் கலந்து ஆப்பிள் சிடார் வினீகரை பருவில் தடவ குணம் தெரியும்.
நீங்கள் பயன்படுத்தும் க்ரீம்களை அடிக்கடி மாற்றாதீர்கள். மேக்கப் சாமான்கள் கொமோடோஜெனிக் இருப்பதை தவிர்க்கவும்.
சருமத்திற்கு ஏற்ற சரியான பராமரிப்பு மற்றும் இயற்கை முறைகளைக் கற்றுக்கொண்டு, முகப்பரு இல்லாத தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை இன்றே சொந்தமாக்குங்கள்.