முக அழகை அதிகரிக்கணுமா? கிச்சன்ல இருக்கு இந்த 7 சீக்ரெட்ஸ்!

Beauty tips in tamil
Natural beauty tips
Published on

உருளைக்கிழங்கு அரிசிமாவு

2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜுசுடன் 1டேபிள் ஸ்பூன் அரிசி மாவு 1டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும். உருளைக்கிழங்கு கொலாஜனை அதிகரிக்கும். அரிசி மாவு முகத்தை இறுக்கமாக வைக்கும். தேனும் ரோஸ் வாட்டரும் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்ஸ்‌  

ஒரு சிறிய கிழங்கை அரைத்து அதில் அரை கப் அரிசிக்கஞ்சி நீர் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் இதைக் கலந்து ஐஸ் ட்ரேயில் வைத்து ஃப்ரீஸ் செய்யவும். தினமும் ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் தடவிவரவும்.  உருளை கிழங்கு பிக்மெண்டேஷனைக் குறைக்கும்.  அரிசிமாவு பிரகாசமாக்கும்.  ஆலோவேரா ஈரப்பதத்தைத் தரும்.

பழைய சாதம் மற்றும்  உருளைக்கிழங்கு மாஸ்க்

அரை கப் பழைய சாதத்துடன் ஒரு சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரையுங்கள்.  அதில் ஒரு டீஸ்பூன் யோக்ஹர்ட்டும் ஒரு ஈ ஆயிலையும் சேர்த்து பேஸ்ட் ஆக்கி  முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பழைய சாதம் இறந்த செல்களை நீக்கும். உருளைக்கிழங்கும் யோக்ஹர்ட்டும் கோடுகளை நீக்கும். ஈ ஆயில் நெகிழ்வு  தன்மை கொடுக்கும்.

உருளைக்கிழங்கு அரிசி மாவு மஞ்சள் பொடி பேக்

ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் அரைத்த உருளைக்கூழ், அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும்  சிறிது பால் சேர்த்து முகம் கழுத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும். மஞ்சள் கருமையை நீக்கும். அரிசி மாவு எக்ஸ்ஃபோலியேட் செய்யும் உருளை மற்றும் பால் ஈரப்பதத்தைத் தரும்.

இதையும் படியுங்கள்:
முழங்கை, கழுத்து கருமையா இருக்கா? இதோ நிரந்தர தீர்வு!
Beauty tips in tamil

உருளைக்கிழங்கு மற்றும் ப்ரௌன் ரைஸ் ஸ்க்ரப்

இரண்டு  டேபிள் ஸ்பூன் வேகவைத்த ப்ரௌன்  அரிசியுடன்  ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலும்  ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜுசும் கலந்து முகத்தில் தடவிக் கழுவவும்.  முகப்பொலிவுடன் இளமையையும் கொடுக்கும்.

சாதக் கஞ்சி மற்றும் உருளைக்கிழங்கு சீரகம்

 2 டேபிள் ஸ்பூன்  உருளைக்கிழங்கு ஜுசுடன் இரண்டு டேபிள் வடித்த சாதக்கஞ்சி சேர்த்து ஒரு டீஸ்பூன் க்ளிசரின் சேர்த்து ஒரு க்ளாஸ் பாட்டிலில் வைத்து இதிலிருந்து சில சொட்டுக்கள் முகத்தில் இரவு தடவி மறுநாள் கழுவவும்.  இறந்த செல்கள் நீங்கி முகம் மிளிரும்.

அரிசி மாவு உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய்

ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக் கிழங்கு ஜுஸ், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜுஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர்  சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரி‌ல் கழுவவும். முகத்தில் கோடுகள் மற்றும் துளைகள் நீங்கி  பொலிவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com