
இந்த ஐஸ் க்யூப் எப்படி தயாரிப்பது?
பீட்ரூட்டை தோல் நீக்கி தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி ஐஸ் ட்ரேயில் வைத்து ஃப்ரீசரில் வைத்துவிடவும்.
நன்கு கெட்டியான பிறகு ஒரு துணியில் வைத்து முகத்தில் மசாஜ் செய்யவும். சரும ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் சிறந்தது. இதன் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஃப்ரீ ராடிகல்களின் அழுத்தத்தைக் போக்குகிறது.
இதில் உள்ள சி சத்து மற்றும் பீடா கரோட்டின் அழற்சியைப் போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இதில் நீர்ச்சத்து உள்ளதால் சருமத்தை நீரேற்றமாக வைக்கிறது.
இதன் ஊட்டச்சத்துக்கள் சி மற்றும் , பொடாசியம் சத்துக்கள் முகத்தில் கோடுகள், சுருக்கங்களை தடுக்கிறது.
இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு முகப்பரு மற்றும் முகப்பிளவுகளை தடுக்கிறது. ஹைபர் பிக்மெண்டேஷனைத் தடுக்கிறது. இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் முகத்துளைகளை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
முகம் கண்ணாடி மாதிரி ஜொலிக்க…
வாசலீன் மற்றும் வாழைப்பழ க்ரீம்.
வாசலீன் ஈரப்பதத்தைத் தரக்கூடியது. துளைகளை நீக்கக் கூடியது. வாழைப்பழத்தில் ஏ,பி,சி மற்றும் ஈ சத்து உள்ளது. அதோடு இயற்கை எண்ணைகள் உள்ளன.
நல்ல பழுத்த வாழைப்பழத்தையும், ஒரு டேபிள்ஸ்பூன் வாசலீனை சூடுபடுத்தி அதையும் சேர்த்துக் கலந்து, மேலும் சில சொட்டு ஆல்மண்ட் எண்ணை சேர்த்து ஒரு பாட்டில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதை இரவில் முகத்தில் தடவி மறுநாள் கழுவ முகம் ஜொலிக்கும். இதை உதடு மற்றும் முட்டியிலும் தடவி அழகு பெறலாம்.
ஓட்ஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு
ஓட்ஸ் முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யும். முட்டையின் மஞ்சள் கரு நெகிழ்வையும் ஈரப்பதத்தையும் தரும். ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்த ஓட்ஸ் மற்றும் மஞ்சள் கருவையும் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ முகம் ஜொலிக்கும்.
முகம் பளபளக்க இயற்கை சீரம்
க்ரீன் டீ மற்றும் க்ளிசரின் சீரம்
ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீடீ டிகாக்க்ஷன்குளிரவைத்தது, ஒரு டீஸ்பூன் க்ளிசரின் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலோவேரா ஜெல் இவற்றைக் கலந்து முகத்தில் தடவிக் கழுவ முகம் பளபளக்கும்.
முகம் சிவத்தலைத் தடுக்கும் சீரம்
சாமோமைல் டீ டிகாக்க்ஷன் ஒரு டேபிள் ஸ்பூன். ஒரு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் மற்றும் ஒரு டீஸ்பூன் ஜோஜோபா ஆயில் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜ் ஜில் குளிர் வைத்து முகத்தில் தடவிக் கழுவ முகம் புத்துணர்ச்சி பெறும்.