

இயற்கை முறையில் பெண்கள் அழகு மெருகேற வழிகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
கண்கள்
சில பெண்களுக்கு கண்களில் சிவப்பு, எரிசசல் நீர்வடிதல் போன்றவை உண்டாகும். பற்படாகம் என்னும் தரையோடு வளரும் சிறிய பூண்டின் செடியில் ஒருபிடி எடுத்து பசும்பாலில் அரைத்து அதை தலையில் தேய்த்து ஒருமணி நேரம் கழித்துப் குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச்செய்ய பிரச்னைகள் நீங்கும்
மேனி பளபளக்க
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு பச்சைப்பயறு ஆகியவற்றை சம எடையில் அரைத்துத் தூளாக்கி அதைக் கொண்டு உடலில் தேயாத்துக் குளிக்க சருமம் தங்கம் போல் மின்னும்.
விரல்கள் மினுமினுக்க
பாலேட்டையும், முட்டையின் வெண்கருவையும் கலந்து அதைக் கைகளில் இரவு தடவி வைத்திருந்து காலை பச்சைப் பயறு மாவு போட்டுத் தேய்த்துக் கழுவ வேண்டும். இதை முழங்கை வரைத் தடவலாம். இம்மாதிரி தொடர்ந்து பயன்படுத்த கைகளும், கை விரல்களும் பொன்னிறத்தில் எழில் ததும்ப மின்னும்.
இரவில் படுக்கும் செல்லுமுன் கைவிரல்களில் விளக்கெண்ணை அல்லது ஆலிவ் எண்ணை தடவிக்கொண்டு கைவிரல்களை நன்றாக உருவிவிடுங்கள் இது கைகளை அழகுபடுத்தும்.
நல்லநிறம் வேண்டுமா?
நல்ல நிறமாகவும் பளபளப்பாகவும் ஆக தேங்காய் எண்ணையோடு மஞ்சள் தூளை குழப்பி உடல் முழுவதும் தடவி குளித்து வர உங்கள் மேனி தங்க நிறத்தில் மினுமினுக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க
கடலைமாவில் பாலேடு கலந்து குழைத்து இரவில் முகத்தில் தடவி மறுநாள் பயத்தமாவு கொண்டு கழுவ கரும் புள்ளிகள் மறையும்.
முகத்தேமல் அகல்
எலுமிச்சை சாறுடன் சமஅளவு துளசிச்சாறு சேர்த்து தடவிவர தேமல் நீங்கும்.
மூட்டுக்களில் கருமை நீங்க
மருதாணி இலை ஒரு கைப்பிடி முன் துணிக்கு போடும் சோப்புத் துண்டு சேர்த்து அரைத்து கருமையான பகுதிகளின் தேய்த்து பிறகு அரப்புத் தூள் தேய்த்துக் குளிக்க கருமை நீங்கும்.
முகப்பரு நீங்க
ரோஜா இதழ்களை பன்னீர் விட்டு அரைத்து பருக்களில் தடவிக் கழுவ பரு நீங்கும்.
புனுகை பருவில் தடவ பரு உதிர்ந்துவிடும்
முகத்தில் பருக்களின் தழும்பு நீங்க படி காரத்தைக் கரையவிட்டு அந்த நீரால் முகத்தைத் கழுவ முகம் பட்டு போல் மென்மையாகும்.
தேங்காய் எண்ணை எலுமிச்சை சாறு சந்தனம் இவற்றை சம அளவு எடுத்து கலந்து பருக்களின் தடவ அவை நீங்கும்.
முகம் அழகு பெற
புல்வெளியில் படிந்திருக்கும் பனித்துளிகளை பஞ்சினால் ஒற்றி எடுத்து முகத்தைத் துடைக்க முகம் மாசு மருவற்று காட்சி தரும்.
முகம் சுருக்கம் நீங்க
வெள்ளைச் சாரட்டணை வேரையும் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), தோல். நீக்கிய மஞ்ள் மற்றும் எருமைப் பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் குளிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து இரண்டு வாரம் செய்தால் முகம் சுருக்கம் நீங்கி பொலிவு பெறும்.
இயற்கை மணம் உடலில் பெற
திருநீற்றுப்பச்சிலை மூன்று, மாசி பத்திரி இலை ஒன்று, ஆவாரங் கொழுந்து சிறிது, கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கு சிறிது இவற்றையெல்லாம் அரைத்து உடலில் பூசி பின் பயத்தமாவால் தேய்த்துக் குளிக்க உடல் கமகம வென்று மணக்கும்.
ஒருபங்கு அதிமதுரத்துடன் இரண்டு ஸ்பூன் நெய்யும், இரண்டு ஸ்பூன் தேனும் கலந்து காலையில் உணவு க்குமுன் அருந்த உடல் மிக இளமையாக இருக்கும்.
ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ முகம் பளபளவென்று இருக்ககும்.
புருவம் அழகாக
காரட்டை வெட்டி அதை புருவங்களில் தேய்த்துவர கருமையாகவும் ஒழுங்காகவும் வளரும்.
கன்னங்கள் வண்ணம் பெற
வினீகரில் ரோஜா இதழ்களை ஊறவைத்து கன்னங்களில் தடவிவர கன்னம் ரோஜா நிறமாகும்.
முழங்கை முழங்கால் கருமை நீங்க
எலுமிச்சை சாற்றைத் தேய்த்து பிறகு பயத்தமாவால் தேய்த்துக் குளிக்க கருமை நீங்கும்.