
ஆலோவேரா ஜெல்
ஆலோவேரா வுடன் ஒரு ஈ காப்ச்யூல் ஆயில் சேர்த்து இந்த ஜெல்லை முகத்தில் தடவ ஈரப்பதத்துடன் இருக்கும்.
மஞ்சள் ஜெல்
இரண்டு டேபிள் ஸீபூன் ஆலோவேரா ஜெல்லுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடிமற்றும் ஒரு ஈகாப்ச்யூல் எண்ணை சேர்த்து நன்கு கலந்து இதை முகத்தில் தடவ மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பிக்மெண்டேஷனைக் குறைத்து முகத்தை பொலிவாக்கும்.
பீட்ரூட் ஜெல்
பீட்ரூட் ஜுசுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து மென்மையாக்கி முகத்தில் தடவவும். இதன் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இயற்கை பளபளப்பைத்தரும்.
காரட் ஜெல்
ஒரு காரட்டை வேகவைத்து கூழாக்கி அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து முகத்தில் தடவிக் கழுவ பீடாகரோடினும் கொலாஜனும் இணைந்து முகத்தை பிரகாசமாக்கும்.
க்ரீன் டீ ஜெல்
க்ரீன்டீ டிகாக்ஷனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து முகத்தில் தடவ அழற்சியை பல் போக்கி மனுக்களைத் தடுக்கும்.
வேப்பிலை ஜெல்
வேப்பிலையை அரைத்து அத்துடன் சமஅளவு ஆலோவேரா ஜெல் சேர்த்து முகத்தில் தடவ வேப்பிலையின் பூஞ்சை எதிர்ப்பு முதற்பக்கத்தை மாசு மருவற்றதாக ஆக்கும்.
அரிசி கஞ்சி ஜெல்
அரிசி வடித்த கஞ்சியில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் மற்றும் ஒரு சொட்டு ரோஸ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ முகம் ரோஜா மாதிரி ஆகும்.
தக்காளி ஜெல்
ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜுசுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி முகத் துளைகள் நீங்கி நல்லசீபம் உற்பத்தியாகும்.
உருளைக்கிழங்கு ஜெல்
2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜுசுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து முகத்தில் தடவ கருமைநீங்கி புத்துணர்ச்சி பெறும்.
வெள்ளரி ஜெல்
2 டேபிள் ஸ்பூன் வெள்ளரி ஜுசுடன் 1 டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் மற்றும் 2 சொட்டு ஆல்மண்ட் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ சிவத்தல் நீங்கி ஈரப்பதத்துடன் வைக்கும்.
வெந்தய ஜெல்
ஊறவைத்து அரைத்து 2டேபிள் ஸ்பூன் வெந்தயத்துடன் 1டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து முகத்தில் தடவ கொலாஜன் தூண்டப்பட்டு முகம் மென்மையாகவும்.
காபி ஜெல்
ஒரு டீஸ்பூன் காபிபௌடருடன் 2டேபிள்ஸ்பூன் ஆலோவேரா ஜெல் மற்றும் 1ஈ ஆயில் சேர்த்து முகத்தில் தடவ இரத்த ஓட்டம் அதிகரித்து கண்களின் கீழ் உள்ள கருமை நீங்கி முகம் பளபளக்கும்.
முகத்தில் எண்ணைப் பசையை தடுக்க செய்ய வேண்டியவை.
அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யாதீர்கள். முத்தை அழுத்துவதால் துளைகளில் இருந்து அதிக எண்ணை சுரந்து முகம் எண்ணை வடியும். வாரம் ஒருமுறை மட்டும் எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்.
அதிக கெமிகல் இல்லாத சோப் உபயோகிக்கவும்.
நீங்கள் சருமத்திற்காக உபயோகிக்கும் பொருட்கள் கடினமானதாக இருக்கக்கூடாது. செயற்கை மணம் நிறைந்ததாக இருக்கக்கூடாது.
மென்மையான டோனர்களை பயன்படுத்தவும். நீங்கள் Moisturiser பயன்படுத்தும்போது அது எண்ணை பசை இல்லாததாக பார்த்துக் கொள்ளவும்.
சன் ஸ்க்ரீன் எண்ணைப் பசை முகத்திற்குப் சிறந்தது. எண்ணை மற்றும் மணமுள்ள சன் ஸ்க்ரீன் கள் அதிக எண்ணை பசை யார்க்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
உங்கள் முகத்தை அடிக்கடி தொட்டால் அது பாக்டீரியாக்களை பரவ வைக்கும். உங்கள் கைகளை சுத்தம் செய்த பிறகு முகத்தைத் தொடவும்.
எண்ணைப் பசை முகம் உள்ளவர்கள் எண்ணை மிகுந்த சீரத்தை தவிர்க்கவும்.