
வேப்பிலைப்பொடி, துளசி பொடி, புதினா பொடி தலா ஒரு டீஸ்பூன் மூல்தானி மிட்டி இரண்டு ஸ்பூன்கள் எடுத்துக்கொள்ளவும். மிதமான சுடுநீரில் அவற்றைக் கலந்து முகப்பருக்களில் தடவவும். கண்ணுக்குகீழ் தடவவேண்டாம்.15 நிமிடம் கழித்து முகம் கழுவலாம்.
இரண்டு ஸ்பூன் ஓமவல்லிச்சாறுடன் ஒரு ஸ்பூன் சிவப்புச் சந்தனத்தை கலந்து பருக்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனக்கட்டையில் பன்னீர்விட்டு அரைத்து தடவ பருக்களால் ஏற்படும் வடு மறையும்.
அருகம்புல் பொடியும் குப்பைமேனி இலை பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களின் மீது போடலாம்
பத்து பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு ஊறவைக்கவும் பிறகு அதை வடிகட்டி முகத்தில் பூசவும்.
முகம் ஜொலிக்க இளநீர் சிகிச்சை…
முதலில் இளநீரில் காட்டனை நனைத்து முகத்தைத் துடையுங்கள். இதனால் அழுக்கு நீங்கி முகம் குளுமையாகும்
தேங்காய்ப் பால்
மைதாமாவு, தேங்காய் பால் தலா இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் கலந்து முகத்தில் பேக் போடவும். 15 நிமிடம் கழித்து கையில் தண்ணீர் எடுத்து முகத்தில் வட்டவடிவில் தேய்க்க இறந்த செல்கள் நீங்கும். பின் வெது வெதுப்பான நீரால் துடைக்கவும்.
சப்போட்டா ஃபேசியல்
பழுத்த சப்போட்டா பழம் இரண்டு டீஸ்பூன்கள், தேங்காய் பால், தேன் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து கழுத்து கை முகம் நெற்றிப் பகுதிகளில் அழுத்தித் தடவவும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பிறகு காட்டனை தேங்காய் பாலில் நனைத்து மசாஜ் செய்யும்போது சருமம் இறுக்கமாகவும். வறண்ட முகத்தை இது பொலிவாக்கும்.
தேங்காய் பேக்
மூல்தானி மிட்டி தேங்காய் பால் தலா இரண்டு ஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பேக்காக போடவும். மூல்தானி மிட்டி சருமத்தை இறுகச் செய்யும் தேங்காய்பால் சருமத்தை மிருதுவாக்கும். பிறகு வெது வெதுப்பான நீரால் முகத்தைத் துடைக்க முகம் ஜொலிக்கும்.
வெள்ளரிச்சாறு, தர்பூசணிச் சாறு இவைகளை பயன் படுத்தினால் சருமம் பொலிவாகும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேனோடு ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ அரை டீஸ்பூன் அதிமதுரம் பொடி கலந்து 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதை பிறகு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் சிவப்பழகு பெறும்.