வெயிலில் கூசும் கண்களைப் பாதுகாக்க எளிமையான குறிப்புகள்!

Simple tips to protect your eyes
eye care tips
Published on

கோடைக்காலத்தில் நமக்கு வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள பாகங்கள் பெரும்பாலும் பாதிக்கப்படும். அதில் குறிப்பாக கண்கள் மிகவும் பாதிக்கப்படும். கண்ணை கவனமாக பார்த்துக் கொள்ளவில்லை என்றால் நமக்கு பார்வை இழப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்களை பாதுகாக்க எளிய குறிப்புகளை இப் பதிவில் பார்ப்போம்.

கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணையை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டு வரவேண்டும்.

பாதாம் பருப்புகளை பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையும் மறையும்.

கண் கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து இரவில் பூசி வந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

தினமும் கண்களுக்கு பயிற்சி அளித்து வந்தாலும் கண்பார்வை நன்றாக இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றியும் பேக் போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.

கண்களின் இமைகளை சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசி வரவேண்டும்.

மூடிய கண் இமைகளின் மீது பன்னீரை பஞ்சில் நனைத்து தேய்த்து விட, கண் இமைகளின் நிறம் கூடும்.

திரிபலா சூரணத்தைச் சாப்பிட்டு வந்தாலும் கண்பார்வை நன்றாக இருக்கும்.

தேயிலைத்தூளை கொதிக்கவைத்து வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மேல் வைத்து வந்தாலும் கருவளையம் நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான மணப்பெண் ஜடை அலங்கார டிப்ஸ்!
Simple tips to protect your eyes

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகத்தில் 100 கிராம் நல்லெண்ணை சேர்த்துபுகை வரும்படி காய்ச்சி அந்த எண்ணையை கண்ணின் மேலும் கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் சிகப்பும் மாறும்.

திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகையளவு எடுத்து ஒரு கப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக்கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளி வீசும்.

உருளைக்கிழங்கை அரைத்து கண்களைச் சுற்றியும் கண்களின் மேலும் பேக் போட கருவளையங்கள் மறைந்துவிடும்.

கண்களை இடது-வலதாக, மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 முறை செய்யவேண்டும். பிறகு கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கான சிறந்த பயிற்சி.

வெண்ணையுடன் கொத்தமல்லிச்சாறை கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

நந்தியாவட்டை பூவை பறித்து நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டி வர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்களின் மேல் ஒற்றியெடுக்க, கண்கள் குளிர்ச்சி அடைந்து பிரகாசமாகும்.

அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும் அப்படி செய்தால் முக சோர்வு நீங்கும். 

கோடைக் காலத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் பாதிக்கப்படுவது கண்தான் செல்போனை குறைந்த அளவுக்கு பயன்படுத்துவோம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உதட்டுக்கேற்ற ஸ்க்ரப் எது? சொரசொரப்பான உதட்டுக்கு?
Simple tips to protect your eyes

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com