
வறண்ட மற்றும் எண்ணெய் பசையையும் கலந்த சருமம் என்பது நெற்றி, மூக்கு, தாடை பகுதியில் எண்ணெய் பசையுடனும் மற்ற பகுதிகள் வறண்டும் இருக்கும். இது காம்பினேஷன் ஸ்கின் ஆதலால் இந்த இரண்டு பகுதிகளையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டும். இதை காம்பினேஷன் ஸ்கின் என்று கூறுவார்கள். இத்தகைய சருமத்தை உடையவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்து பேக் போடவேண்டும். Natural (face pack) இத்தகைய சருமத்தை உடையவர்கள் கிளிசரின், துளசி, வேம்பு, சந்தன சோப்புகளை உபயோகிக்கலாம்.
கிளென்சிங், டோனிங், மாய்ச்ச ரைசிங் இந்த மூன்றுமே பளபளப்பான சருமத்திற்கு அவசியம்.
காய்ச்சாத பசும்பாலில் மஞ்சள் தூள், தேன் சேர்த்து கலந்து இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சிடும். பிறகு டோனிங் செய்யலாம்.
அதில் டோனிங் எல்லா வகையான சருமத்திற்கும் செய்து கொள்ளலாம். இதனால் சருமம் புத்துணர்ச்சியும், பொலிவும் பெரும். ரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்திற்கு பளபளப்பு ஏற்படும். மேலும் முகத்தில் உள்ள அழுக்கு மேக்கப் போன்றவற்றை நீக்க உதவும். தவிர சருமத்தில் உள்ள சின்ன சின்ன துவாரங்களில் உள்ள அழுக்கைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு தேவையான பொருட்களான ஹெர்பல் குணமுடைய டோனிங் லோஷன் மிக நல்லது. ரோஜா, தேன், புதினா என மூன்று பிளேவரில் கிடைப்பதை பயன்படுத்தலாம்.
முட்டைக்கோஸ் அல்லது வெள்ளரிச்சாற்றை பன்னீருடன் கலந்து டோனராக பயன்படுத்தலாம். ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம்.
டோனிங் மாஸ்க்:
முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், முல்தானி மெட்டி அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி அது நன்றாக காய்ந்ததும் பச்சைத் தண்ணீரில் கழுவலாம்.
வாரம் இரண்டு முறை இப்படி செய்தால் சருமம் பளிச்சிடும்.
நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை மசித்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும். இந்த பேக் நல்ல சத்தை தருவதோடு ஈரத்தன்மையையும் கொடுக்கும். (Rejuvenation)
தேன், தயிர், பயத்தம் மாவு மூன்றையும் ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் எடுத்து கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் தேய்த்து மிதமான வெந்நீரில் கழுவ, இந்த பேக் சருமத்தை ஒரே சீராகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ளும்.
வைட்டமின் ஈ எண்ணெய், கடுகெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ட்ராபெரி பழச்சாறு இயற்கையாகவே தோலை பளபளப்பாக்கும் தன்மை உடையது. ஸ்ட்ராபெரி பழச்சாற்றை தினசரி குளிப்பதற்கு முன் முகம், கழுத்து கை கால்களில் தடவி ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் வறண்ட மற்றும் எண்ணெய் பசை கலந்த சருமம் அழகு பெறும்.