கருவேப்பிலை, செம்பருத்தியால் செய்யப்பட்ட இயற்கையான ஹேர் டை மற்றும் ஹேர் ஆயில்!

இயற்கையான ஹேர் டை...
இயற்கையான ஹேர் டை...

ஹேர் டை

இந்த ஹேர் டையை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே வெள்ளை முடிகள் கூட கருமையாக மாறும் தன்மை உடையது. இளம் நரை இருப்பவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதால் வேரில் இருந்து வரும்  முடிகள் கூட கருமை நிறமாக வளர ஆரம்பிக்கும். இதை செய்ய,

தேவையான பொருட்கள்;

கருவேப்பிலை _2 கைப்பிடி செம்பருத்தி இலை_1 கைப்பிடி செம்பருத்தி பூ    _15    அவுரி பொடி     _1/2 கப் கருஞ்சீரகம்      _2 ஸ்பூன்

செய்முறை;

ஒரு மிக்ஸி ஜாரில் ஃபிரஷான கருவேப்பிலையை உருவி போட்டு அத்துடன் செம்பருத்தி இலையை சேர்த்து மேலும் செம்பருத்தி பூவை பச்சையாக இருக்கும் காம்பை எல்லாம் அகற்றிவிட்டு அத்துடன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும். கரும் பச்சை நிறத்தில் விழுது கிடைக்கும்.

இந்த விழுதில் சிறிது தண்ணீர் சேர்த்து சல்லடை யில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை அப்படியே மூடி வைத்து விட்டு மறுநாள் காலையில் தலையில் தேய்த்து கொள்ளலாம்.

சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் ஒரு வாணலியில் இந்த கலவையை ஊற்றி  அடுப்பில் வைத்து தீயை மீடி யாக  வைத்து  கிண்டி கொடுக்கவும். கொதித்து தண்ணீர் சுண்டி வரும்போது தீயை அணைத்து விடலாம். பின்னர் நன்றாக ஆறிய பின் ஒரு தட்டு போட்டு மூடி 12 மணி நேரம் அப்படியே வைத்து விடலாம். 12 மணி நேரம் கழித்து மீண்டும் திறந்து பார்க்கும்போது கெட்டியாக அரப்பு போல் இருக்கும். பின்னர் அத்துடன் அவுரி பவுடரை சேர்த்து கிண்டி விட்டு பிறகு அதை தலையில் அப்ளை பண்ணி விடலாம். மீதி இருப்பதை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளலாம்.

ஹேர் ஆயில்

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் இந்த கருவேப்பிலை  செம்பருத்தியினால் செய்யப் பட்ட எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து குளிப்பதால் கருமையான, அடர்த்தியான முடியை பெறலாம். மேலும் கண்ணிற்கும், உடம்பிற்கும்  குளிர்ச்சியை அளிக்கும். இதை செய்ய தேவையான பொருட்கள்;

செம்பருத்தி பூ_15  

செம்பருத்தி இலை _15

கருவேப்பிலை_1 கைப்பிடி

தேங்காய் எண்ணெய்_1 லிட்டர்

இதையும் படியுங்கள்:
உங்கள் வெற்றிக்கு உதவும் 8 சிறந்த நண்பர்கள் யார் தெரியுமா?
இயற்கையான ஹேர் டை...

செய்முறை    

செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு இத்துடன் செம்பருத்தி இலைகளையும்,, வேப்பிலை மற்றும் கருவேப் பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அம்மியில் அரைத்து உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் கொதித்ததும் சிறு தீயில் வைத்து கொண்டு அரைத்து வைத்த கலவையை சேர்த்து கிண்டி விடவும். இந்த கலவை நன்கு பொரிந்து எண்ணெயின் அடியில் தங்கி விடும். பின்னர் இறக்கி ஆறவிடவும். இதை உடனே தலையில் தேய்க்க கூடாது. நான்கு நாளைக்கு ஊற விட்டு அதன் பிறகு சல்லடை யில் வடிகட்டி கண்ணாடி பாட்டி லில் ஊற்றி வைத்து விட்டு தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தடுத்து அழகான நீண்ட முடியை பெறலாம்.

மேலும் முகத்திற்கு பொலிவான நல்ல ஆரோக்கியமான தோற்றம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com