இயற்கையாகவே முகத்தின் ஸ்கினை (Skin) புத்துணர்ச்சி, பிரகாசம் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி வழக்கமாக சில எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள பழக்கங்களைப் பின்பற்றினால் போதுமானது. வீட்டிலேயே செய்யக்கூடிய குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்.
1.சரியான நீர்ச்சத்து
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் முகம் தானாகவே பிரகாசமாகும். வெந்நீரில் எலுமிச்சை சில துளிகள் சேர்த்து காலை குடிப்பது டிடாக்ஸ் செய்கிறது.
2.சூரிய ஒளி பாதுகாப்பு
காலை 10 மணிக்கு பிறகு நேரடியாக அதிக சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்கவும். இயற்கை பாதுகாப்புக்கு அலோவேரா ஜெல் தடவலாம். வீட்டிற்கு வெளியே செல்லும் போது காட்டன் துணியால் முகத்தை மூடுதல் நல்லது.
3. இயற்கை கிளின்சிங் (Natural Cleansing): தினசரி:
கச்சா பால் + ரோஸ் வாட்டர் கலவையை பஞ்சால் துடைக்கவும். இது தூசி, எண்ணெய், மேக்கப் அனைத்தையும் மென்மையாக நீக்கும்.
காஃபி பவுடர், சுகர், தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் 5 நிமிடம் பூசி தேய்த்து விட்டு பின்னர் face wash பயன்படுத்தி முகத்தை நன்கு சுத்தப்படுத்து வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.
Ice cube பயன்படுத்தி 2 முதல் 3 நிமிடம் வரை தேய்த்து விட்டால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
கடலைமாவு, தயிர், தேன் மூன்றையும் கலந்து ஒரு face pack தயார் பண்ணி முகம், கழுத்து பகுதிகளில் நன்கு தேய்த்து பிறகு தண்ணீர் ஊற்றி மசாஜ் பண்ணி விட்டு கழுவி சுத்தப்படுத்தியப் பிறகு முகத்தின் பிரகாசத்தை முழுமையாக நாம் அடையலாம்.
வாரம் 2 முறை:
கடலை மாவு + மஞ்சள் + பால்/தயிர் கொண்டு முகத்தை கழுவினால் ஸ்கின் glowy ஆகும்.
தேன் + எலுமிச்சை ஸ்கினை brighten செய்கிறது. Dark spots குறையும். 10 நிமிடம் போதுமானது
கற்றாழை ஜெல் இயற்கையான moisturiser. Pimples, scars குறையும், வெள்ளரி பாக்ஸ் குளிர்ச்சி தரும். Puffy eyes & dullness குறையும்
Moisturising: தேங்காய் எண்ணெய், அலோவேரா, ஆலிவ் எண்ணெய் போன்றவை இயற்கையான moisturisers. தூங்குவதற்கு முன் மிக லேசாக தடவினால் skin soft & smooth ஆகும்.
4. உணவுப் பழக்கங்கள்
தினமும் பழங்கள், காய்கறிகள், கீரை, அவகாடோ, கடலை, விதைகள் (flax, chia, pumpkin) சேர்க்கவும். Vitamin A, C, E நிறைந்த உணவுகள் ஸ்கினை புதுப்பிக்கும். எண்ணெய், ஜங்க், deep-fry foods குறைக்கவும்.
5. போதிய தூக்கம்
தினமும் 7முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் skin repairக்கு மிகவும் அவசியம். Late night தூக்கம் skin dullness, dark circles ஏற்படுத்தும்.
6. Stress-free வாழ்க்கை
தினமும் 10 முதல் 15 நிமிடம் யோகா / பிராணாயாமம் செய்யவும். மனஅழுத்தம் குறைந்தால் skin clear & bright இருக்கும்.
7. தவிர்க்க வேண்டியவை
முகத்தை அதிகம் தொடுவது, Chemical-heavy face creams, அதிக scrub, அதிக மேக்கப், முறையாக cleanse செய்யாமல் இருப்பது
முகத்தின் ஸ்கினை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி சுத்தம், சரியான மாய்ஸ்சரைசிங், சூரிய பாதுகாப்பு மற்றும் இயற்கையான உணவுப் பழக்கங்கள் போதுமானவை. Skin Type எது இருந்தாலும், எளிய பராமரிப்பு பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் முகம் இயற்கையாகவே பிரகாசமாக, சுத்தமாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.