

ஹரியாலி போஹா மசாலா (Green Masala-Poha) ரெசிபி:
தேவையான பொருட்கள்:
1.கெட்டி அவல் 2½ கப்
2.பச்சைப் பட்டாணி ¼ கப்
3.நறுக்கிய வெங்காயம் ¼ கப்
4.கடுகு ¼ டீஸ்பூன்
5.சீரகம் ¼ டீஸ்பூன்
6.கறிவேப்பிலை 1 இணுக்கு
7.வறுத்த வேர்க்கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.மஞ்சள் தூள் சிறிது
10.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
11.லெமன் ஜூஸ் ½ டேபிள் ஸ்பூன்
கிரீன் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1.கொத்தமல்லி இலை ¼ கப்
2.புதினா இலை ⅛ கப்
3.இஞ்சி ஒரு சிறு துண்டு
4.பூண்டுப் பல் 2
5.பச்சை மிளகாய் 2
6.லெமன் ஜூஸ் ½ டீஸ்பூன்
7.அரைப்பதற்கு தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
அவலில் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி, நீரை வடித்து வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி இலைகளுடன் புதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், லெமன் ஜூஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அவல் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறு தீயில் நன்கு கலந்து விடவும். பின் அரைத்து வைத்த கிரீன் மசாலாவை ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நீர் சத்து இல்லாமல் கலவை பொல பொலவென்று ஆகும் வரை வைத்திருக்கவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி லெமன் ஜூஸ் மற்றும் வேர்க்கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். மேலே கொஞ்சம் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். காலை உணவுக்கு சுவையான ஹரியாலி போஹா மசாலா
தயார். ஊறுகாய் அல்லது கெட்டித் தயிர் தொட்டு சாப்பிடலாம்.