முகப்பரு முதல் வறண்ட சருமம் வரை... இயற்கையான முறையில் நிரந்தர தீர்வு!

glowing-skin-at-home
glowing-skin-at-home
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

-ஆ.நர்மதா

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு அவர்கள் நாடுவது செயற்கையான பொருட்களை மட்டுமே. இயற்கையாகவே வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தாவரங்களை வைத்து எவ்வாறு முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு அல்லது பயித்தம் பருப்பு என்று அழைக்கப்படும் இந்த பருப்பு முகப்பொலிவிற்கு அதிகம் உதவுகின்றன. தங்களுக்குத் தேவையான அளவு பாசிப்பருப்பை எடுத்து அதை நன்கு கழுவி வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். நன்கு ஈரம் இல்லாத அளவிற்கு காய்ந்தவுடன் அதனை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தினசரி குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக இந்த பாசிப்பருப்பு மாவை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் பளபளப்பான சருமம் மற்றும் உடல் ஆரோக்கியமாகஇருக்கும். பாசிப்பருப்பு முகத்தை பொலிவாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.

வேப்பிலை

இன்றைய ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இளம் வயதிலேயே முகத்தில் முகப்பருக்கள், கருமை அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு நம் வீட்டில் அருகிலேயே இருக்கும் வேப்பிலை சிறந்த மருந்தாகவும், முகப்பொலிவு தரும் பொருளாகவும் உள்ளது. வேப்பிலையை நன்கு அலசி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை அரைக்கவும். இதனை பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்கள் முகத்தில் தேய்ப்பதான் மூலம் அவர்களுக்கு இருக்கும் முகப்பருக்கள், கருப்பு திட்டுக்கள் நீங்கி பளபளப்பாக முகம் ஜொலிக்கும். வேப்பிலை விரைவில் பலன் தரக்கூடியது.

இதையும் படியுங்கள்:
சாதாரண அழகையும் பேரழகாக மாற்றும் பூச்சூடும் கலை!
glowing-skin-at-home

கற்றாழை

இளம் வயதிலேயே சிலருக்கு முகம் வறட்சி அடைந்தது போல் காணப்படும் . அவர்கள் கற்றாழையை பயன்படுத்துவதன் முகத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் இருக்கும். செயற்கையாக வெளியில் வாங்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையாகவே நம் வீட்டில் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

ஒரு நீள கற்றாழையை அதனுடைய தோள்களை சீவி விட்டு நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆகும் வரை அரைத்துக் கொள்ளவும். பின் அதனை முகத்தில் சேர்த்து நன்கு மசாஜ் செய்யவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவவும். பளபளப்பான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்

நம் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் முகத்தின் பளபளப்பை கூட்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தேய்த்து மஜாச் செய்வதன் மூலம் பளபளப்பான மற்றும் பொலிவான ஈரத்தன்மை உடைய முகம் கிடைக்கும்.

இந்த நான்கு பொருட்களும் இயற்கையாகவே முகத்தை அழகுபடுத்தும். எந்தவித பக்கவிளைவும் இதில் ஏற்படாது. இவ்வாறு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து நம் முகத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com