இளவயதில் நரைமுடி? இயற்கை மூலிகை, வீட்டுவைத்திய முறைகளால் கருப்பாக மாற்ற வழிகள்!

கெமிக்கல் டை, ஷாம்பு போன்றவற்றை தவிர்த்து, வைட்டமின் பி சத்து நிறைந்த உணவு, மூலிகை எண்ணெய்கள், கருவேப்பிலை துவையல், பனை வெல்லம், நெல்லிக்காய் போன்ற பாரம்பரிய முறைகள் மூலம் இளநரையை கட்டுப்படுத்தும் இயற்கை தீர்வுகள்
premature-grey-hair
premature-grey-hair
Updated on

பொதுவாகவே சிலருக்கு வயது சுமாா் எழுபதை தாண்டினாலும் முடியின் நிறம் மாறுவதில்லை. அதேபோல கண்பாா்வையும் தெளிவாக தொிவதும் உண்டு. அதைப் பொருத்தவரை பாரம்பர்யம்,  நல்ல சத்தான உணவு, உடல் பராமரிப்பு இப்படி பலவகைகளை கூறலாம். இருப்பினும் சிலநோய்கள் பாரம்பர்ய  வகையில் குடும்பத்தில் ஒருசிலருக்கு வருவதும் உண்டு.

அதேபோல சிலருக்கு இளவயதிலேயே இளநரை எட்டிப்பாா்த்து தலை தூக்குவதும் உண்டு. அதற்காக சிலர் தேவையில்லாத ஷாம்பு, மற்றும் கெமிக்கல் கலந்த டை போன்ற வகைகளை  தடவி தலைமுடியை சுத்தம் செய்வதும் உண்டு. அது சிலசமயம் சிலருக்கு எதிா் விளைவுகளை தந்துவிடலாம்.

ஆக, இளவயதில் நரைமுடி வளர்வதை இயற்கையான முறையில் தடுக்கலாம். பொதுவாக நமது உணவுப்பழக்க வழக்கங்களை நாம் பயன்படுத்தும் விதத்திலும் தடுக்கலாம். வைட்டமின் பி போன்ற மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். அதேபோல வைட்டமின் பி சத்து நிறைந்த உணவு, கறிகாய், பழவகை, அது தொடர்பான உணவு வகைகளை சாப்பிடுவது நல்ல பலனைத்தரும்.

பொிய நெல்லிக்காயை அரைத்து, நல்லெண்ணையுடன் கலந்து சூடாக்கி அதை தினசரி தடவி வரும் நிலையில் இளநரையை தவிா்க்கலாம்.

மூங்கில் இலை தழைகளை பச்சையாக பறித்து வந்து செம்பருத்தி பூவையும் சோ்த்து 20நாட்கள் சுத்தமான தேங்காய் எண்ணையில் நன்கு ஊறவைத்து பின்னா் அந்த கலவையை தலையில் தடவி வர இளநரைக்கு டாட்டா காட்டலாம்.

மருதாணி இலை, கீழாநெல்லி வோ், நெல்லிக்காய் சாறு, நெல்லிமுள்ளி விதை,  தேயிலை நீா், இவைகளை கலந்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் சோ்த்து மூன்று மணி நேரம் ஊறிய பின்னர் தலையில்  நன்கு தேய்த்து இரண்டு மணி நேரம் கழித்து சீயக்காய்  போட்டு அலசி குளித்துவர இளநரையை தவிா்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்க இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்!
premature-grey-hair

பனை வெல்லம், கருப்பட்டி, நாவல் பழம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, போிச்சை பழம், திாிபலாசூரணம், முட்டை, நெல்லிக்காய் இவைகளை சாப்பிட்டு வந்தாலும் இளநரை கட்டுப்படும்.

வாரம் மூன்று முறை கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை சாறு சாப்பிட்டு வந்தாலும் இளநரை வருவதை தவிா்க்கலாம். அதைவிட எளிமையான மருந்தாக கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை சாறு, இவைகளை தேங்காய் எண்ணையில் கலந்து தேய்த்து குளித்துவர இளநரை வராமல் தடுக்கலாம்.

மருதாணி, கருவேப்பிலை, இவைகளை பொடியாக்கி காயவைத்து தேங்காய் எண்ணைய் கலந்து காய்ச்சி  வடிகட்டி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினசரி தடவிவர இளநரை வருவது அறவே நீங்கும். முடி கருப்பாகவும்  மாறும். இயற்கை மூலிகையோடு  வாழுங்கள் இளநரையை இளமையிலேயே விரட்டுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com