பெண்களின் முகம் மிக அழகாக, கவர்ச்சியாக இருக்க இரவில் படுக்கும் போது எருமைப் பாலிலிருந்து எடுத்த பாலாடையை முகத்தில் தடவிக் கொண்டு காலையில் எழுந்ததும் சோப்பு போட்டு முகத்தை கழுவி விட வேண்டும். தொடர்ந்து சில நாட்கள் இப்படி பாலாடையை முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும். பால் வடியும் முகத்தைப்பெற பாலாடையை பயன்படுத்தலாம்.
கொதிக்கும் தண்ணீரை ஒரு பாக்கெட்டில் ஊற்றி அதிலிருந்து வரும் நீராவியைப் பெண்கள் தங்கள் முகத்தில் படும்படி செய்ய வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகத்தில் பரு வராது.
முகத்தில் ஏற்படும் கறுப்புநிற புள்ளிகளை உடனே போக்கிவிட ஜாதிக்காயை கல்லில் அரைத்து முகத்தில் கறுப்பாக உள்ள இடத்தில் தடவி வந்தால் கறுப்பு நிறம் மாறி விடும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி, பெண்கள் அதைத் தங்கள் முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்துச் சோப்பு போட்டு கழுவி விட வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் முகம் அழகாக பளபளப்பாக இளமையுடன் இருக்கும்.
மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு சருமம் சிறிது சிவப்பாக மாறும். மஞ்சள் தேய்த்து குளிக்க விரும்பாத பெண்கள், ஆரஞ்சு பழத் தோலைக் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உடம்பில் தேய்த்துக் குளித்தால் சருமம் சிவப்பாக மாறும்.
சிலருக்கு முகத்தில் இருந்த பருக்கள் போய்விட்டாலும் அந்த பருக்களின் தழும்புகள் மறைவதில்லை. இந்த தழும்புகளை போக்குவதற்கு ஒரு சுலபமான வழி என்ன வென்றால், இளநீரில் சிறிது வெள்ளரிக்காய் சாறையும், எலுமிச்சம் பழச்சாறையும் கலந்து முகத்தில் தடவி விரல்களால் பலத்தடவை முகத்தை அழுத்தி தேய்த்து விட வேண்டும். பிறகு நெக்கோ சோப்பு போட்டு முகத்தை கழுவ வேண்டும். அடிக்கடி இப்படி செய்து வந்தால் பருவால் வந்த தழும்புகள் மறைந்துவிடும்.
சிலருக்கு கன்னம் உப்பிபோய் இருக்கும். இப்படி கன்னம் பெருத்த பெண்கள் தினமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிக்க வேண்டும். தினமும் வெந்நீரில் உப்பை போட்டுக் கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் கன்னங்கள் வலுபெறுகின்றன. கன்னத்தில் உள்ள ஊளைச்சதை குறைந்துவிட்டால் முகம் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
முகம் அழகாக, சிவப்பாக, மிருதுவாக இருக்க ஹாலிவுட் நடிகைகள் கோழி முட்டையின் மஞ்சள் பாகத்தை மட்டும் எடுத்து முகத்தில் தடவிக் கொண்டு, நன்றாக அது உலர்ந்ததும் முகத்தை சோப்பு போட்டு கழுவி விடுகிறார்கள். குடும்ப பெண்களும் இந்த முக அழகு முறையைப் பின்பற்றலாம்!
சிலருக்கு முகம் மெலிந்து இருக்கும். கன்னங்களில் பள்ளம் விழுந்து கிடக்கும். இப்படி இருந்தால் முகம் பார்க்க நன்றாக இருக்காது. இவர்கள் தினமும் காய்ச்சிய பாதாம் எண்ணெயை கொஞ்சம் எடுத்து முகத்தில் நன்றாக தேய்த்து கொண்டு,காலையில் நன்கு கழுவவும்.
முகம் அழகு பெற பப்பாளிப் பழத்தை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். திராட்சை பழச்சாறு சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டு, முறையான உணவும், ஓய்வும் இருந்தால் முகம், தானாகவே அழகு பெறும்.