
வீட்டு வேலை முடிந்ததும் சோம்பலில்லாமல் கைகளை சோப்பு போட்டுக் கழுவவும்.
பன்னீர், க்ளிசரின் இரண்டும் சேர்ந்த கலவையில் கைகளை ஊற வையுங்கள். அல்லது க்ளிசரினும் எலுமிச்சம்பழ ரசமும் கலந்த கலவையில் சற்று நேரம் ஊறவைத்து பின்னர் சோப்புப் போட்டு கழுவித் துடைக்கவும். இரவு மற்றும் காலை இப்படிச் செய்தால் கைப்பகுதித் சருமம் பளபளப்பாக இருக்கும்.
கடலை மாவில் சிறிது பாலைக் கலந்து அதில் அரை மூடி எலுமிச்சை யைப் பிழியவும். இதை கைகளில் பற்று போட்டுக்கொண்டு 15 நிமிடம் கழித்துத் குளிக்க நாளடைவில் நல்ல நிறத்தைத் தரும்.
தயிரில் கற்பூரத்தைக் கலந்து முகத்திலும்,உடலிலும், தலையிலும் பூசிக்கொண்டு பின்னர் குளிப்பது சருமத்திற்க்கு நல்ல நிறம் தரும்.
களி மண்ணுடன் பாலையும் இரண்டு துளி க்ளிசரினும் சேர்த்து கலந்து முகத்திலும் உடலிலும் தேய்த்துக்குளிக்க சருமம் மின்னும்.
கடலை மாவில் மஞ்சள்பொடி கலந்து குளிக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி பழச்சாறு இயற்கையாகவே சருமத்தை பளபளக்கச் செய்யும் தன்மை உடையது. ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை பழச்சாற்றையும் சம அளவில் எடுத்து கைகள், முகம் கால் என்று தடவி அரைமணி நேரம் கழித்துத் குளிக்க சருமம் பளபளப்பாகவும் சிவப்பாகவும் மாறும்.
தேமலை ஒழிக்க சில வழிகள்
சீமை அகத்தி இலையை மைபோல் அரைத்து விளக்கெண்ணெயுடன் கலந்து தேமல் உள்ள இடங்களில் தினமும் இருவேளை ஒரு வாரம் பூசிவர தேமல் மறையும்.
ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து மசாஜ் செய்து இக்கலவையைப் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்க தேமல் மற்றும் சுருக்கமும் நீங்கும்.
தேமல் உள்ளவர்கள் தினமும் எலுமிச்சைச் சாற்றை தேமல் உள்ள இடத்தில் தேய்த்துவர தேமல் மறையும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பேயரத்தை வேர் எனும் மருந்தை வாங்கி நீர் விட்டு மாவு போல் அரைத்து தேமல் உள்ள இடங்களில் பத்து போல் பூசி ஒரு மணி நேரம் காயவைத்து மிதமான வெந்நீரால் கழுவ மூன்றே தினங்களில் தேமல் மறையும்.