குளிர் காலத்தில் கை, கால் வறட்சியை நீக்க இயற்கையான 7 வழிகள்!

natural ways to get rid of dry hands and feet in winter
skin care tips
Published on

கோடை காலத்தை விட குளிர்காலத்தில் கை, கால்கள் வறட்சி அடையும். இதற்கு  மிகவும் குளிர்ச்சியான காற்றுதான் காரணம். அதிகப்படியான குளிர்ச்சியில் காற்றுப்பட்டு கைகளில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் வறட்சியடைந்து கைகள் சொர சொரப்பாக    காணப்படும். இதற்கு கிரீம்களை  விட இயற்கை முறையின் மூலம் எளிதில் நீக்கலாம்.

ஆலிவ் ஆயில்

குளிர்காலத்தில் தினம் இரவில் படுக்கப் போகும்போது கை கால்களில் ஆலிவ் ஆயில் தடவி வந்தால் சருமத்திற்கு வேண்டிய ஈரப்பசை கிடைத்து கை கால்களில் உள்ள வறட்சி நீங்கும்.

தேன் + ஆலிவ் ஆயில்

தேனை ஆலிவ் ஆயிலுடன், சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து சருமம் பொலிவாகும்.

தயிர்

குளிர்காலத்தில் தயிரை தினமும் கை, கால்களில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் சருமத்தில் ஈரப்பசை அதிகரித்து வறட்சி நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால் கை, கால்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

பால்

தினமும் காய்ச்சாத பாலை கை, கால்களுக்கு தடவி சிறிது நேரம் கழித்து, நீரில் நனைத்த காட்டன் கொண்டு துடைத்து எடுத்தால் கைகளுக்கு ஈரப்பசை  கிடைத்து இறந்த செல்களும் வெளியேறும்.

இதையும் படியுங்கள்:
கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டிய 5 வகையான ப்ராக்கள்!
natural ways to get rid of dry hands and feet in winter

பால் + ஒட்ஸ்

பாலில் ஓட்சை பொடி செய்து கலந்து அதனை கை, கால்களில் தடவி  மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து , 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால், கை, கால்களில் உள்ள அழுக்குகள். இறந்த செல்கள் வெளியேறி, ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

மில்க் க்ரீம்

பாலைக்காய்ச்சி மில்க் க்ரீம் ஆக ஆக்கி அதை தினமும் கை, கால்களில் மசாஜ் செய்து வந்தால் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்கள் உருவாகும். கை, கால்கள் பளிச்சென்று இருக்கும்.

இதில் ஏதாவது ஒன்றை செய்துவர வறட்சி நீங்கி கை, கால்கள் பொலிவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com